SHYAM NEWS
06.12.2018
தூத்துக்குடி வங்கியில் ரூ.1 கோடி மோசடி: நகை மதிப்பீ்ட்டாளர் கைது - ரூ50 லட்சம் மீட்பு
தூத்துக்குடியில் வங்கியில் ரூ.1 கோடி நகை மோசடி தொடர்பாக நகை மதிப்பீ்ட்டாளரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மட்டக்கடையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஏராளமானவர்கள் தங்கநகை அடகு வைத்து உள்ளனர். இந்த நகைகள் ஒவ்வொரு 3 மாதத்துக்கும் ஒருமுறை சோதனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி கடந்தவாரம் அதிகாரிகள் நகைகளை பரிசோதனை செய்தபோது, அங்கிருந்த சுமார் 22 பேரின் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை வைத்து மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக டிவிஷனல் மேனேஜர் முகம்மது இஸ்மாயில் அளித்த புகாரின் பேரில், வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மோசடி தொடர்பாக நகை மதிப்பீ்ட்டாளர் கீழ ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த சப்பாணிமுத்து மகன் சண்முகசுந்தரம் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் எஸ்பி முரளி ரம்பா உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அவரை தேடி வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, 1 கோடியே 15ஆயிரம் மோசடி செய்த வழக்கில் சண்முகசுந்தரத்திடம் இருந்து ரூ50 லட்சத்து 15 ஆயிரத்து ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தார். மேலும், இந்த மோசடியில் வங்கி ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர் என்றார். அவருடன் டவுன் டிஎஸ்பி பிரகாஷ், வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன், உதவி ஆய்வாளர் ராஜாமணி, தனிப்பிரிவு மனோஜ் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த வழக்கில் துரிதமாக விசாரனை நடத்தி குற்றவாளியை கைது செய்து பணத்தை மீட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரை மாவட்ட எஸ்.பி.முரளிரம்பா பாராட்டினார்.