ஷ்யாம் நீயூஸ் 30.01.2024 நேற்று டைவர்ஸ் இன்று மனைவிக்கு வெட்டு நண்பருடன் கணவர் வெறிச்செயல்.தூத்துக்குடியில் பரபரப்பு! தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள கிராமம் அல்லிக்குளத்தை சேர்ந்தவர் அமராவதி (24) இவருக்கும் திருவை குண்டத்தைச் சேர்ந்த குணாவிற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனது தாய் வீடான அல்லி குளத்தில் வசித்து வந்துள்ளார். நேற்று இருவருக்கும் டைவர்ஸ் ஆர்டர் வந்த நிலையில் நேற்று அவரின் கணவர் பிள்ளைகளை அழைத்து சென்று விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவி குழுவில் கலந்து கொண்டு வீடு திரும்பிய அமராவதியை கோரம்பள்ளம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் அவரது கணவர் மற்றும் இருவருடன் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளனர் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் இறந்து விட்டதாக கருதி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இருவருக்க...