தூத்துக்குடியில் இடிந்து விழும் வணிக வளாகத்தின் மேற்கூரை உயிர்ப்பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி.
ஷ்யாம் நியூஸ்
10.11.2022
தூத்துக்குடியில் இடிந்து விழும் வணிக வளாகத்தின் மேற்கூரை உயிர்ப்பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி.
தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் அருகில் பியல்ர் பிளாசா என்ற வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் தரைத்தளம் மற்றும் முதல் தளம் இரண்டிலும் சேர்த்து வசந்த் அண்ட் கோ உட்பட சுமார் 200க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் கடைகள் உள்ளன முதல் தளத்தின் மேற்கூறையில் சரிவர பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் அவ்வப்போது திடீர் திடீரென மேற்குரையின் பூசப்பட்ட கான்கிரீட் சிமெண்ட் கட்டிகள் விழுந்து உடைகிறது. தினமும் நடைபெறும் இது போன்ற சம்பவத்தால் அங்கு வந்து செல்லும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் கடை வாடகையாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறது. இங்கு ஏராளமான தட்டச்சு பயிலகங்கள் உள்ளதால் ஏராளமான மாணவ மாணவிகள் வந்து செல்வது வழக்கம். இதை நிர்வாகிக்கும் நிர்வாகிகள் சரிவர கட்டிடத்தை மேற்பார்வை செய்யாததால் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் தலை மீது மாணவர்கள் மீது விழுந்து உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்பு தூத்துக்குடி மாநகராட்சி தக்க நடவடிக்கை எடுத்தால் நல்லது என்று அங்கு வரும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்