ஷ்யாம் நியூஸ்
05.11.2022
தூத்துக்குடியில் ஹிந்தி தினிப்புக்கு எதிராக துண்டு பிரசுரம்; திமுகவினர் வழங்கினார்கள்.
தூத்துக்குடி தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான முக.ஸ்டாலின் ஒன்றிய அரசின் கட்டாய ஹிந்தி தினிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன பொதுகூட்டம் தெருமுனை பிரச்சாரம் போன்றவைகளை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டதையடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஆகியோர் ஆலோசனை படி 29வது வார்டுக்குட்பட்ட பழைய பேருந்துநிலையம் பாளையங்கோட்டை ரோடு மீனாட்சிபுரம் உள்பட பல பகுதிகளில் வீதிவீதியாக நடந்து சென்று தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி திலகராஜ் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் ஹிந்தி தினிப்புக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டச்செயலாளர் கதிரேசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் 14வது வார்டுக்குட்பட்ட விஎம்எஸ்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூத்துக்குடி மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் ஹிந்தி தினிப்புக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கினார்.