ஷ்யாம் நியூஸ்
10.11.2022
தூத்துக்குடி தாலுகா நில அளவை ஊழியர்களின் மெத்தனத்தால் பொதுமக்கள் அவதி .
தூத்துக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வைப்பதற்கும் பட்டா மாறுதல் செய்வதற்கும் ரேஷன் கார்டுகள் மாற்றம் வாக்காளர் அட்டை பெயர் மாற்றம் செய்ய வரும் பொதுமக்கள் நிர்வாக அலுவலகங்களை மக்கள் எளிதில் தொடர்பு கொள்வதற்காக தூத்துக்குடியின் மையப்பகுதியான டூவிபுரத்தில் தூத்துக்குடி தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது . சான்றுகள் பெறுவதற்கும் பட்டா மாறுதல் பெறுவதற்கும் நில அளவை செய்வதற்கும் ஏராளமான பொதுமக்கள் தினமும் தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இங்கு வரும் பொதுமக்களை ஊழியர்கள் பொறுப்பில்லாமல் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக நில அளவை பிரிவில் பணம் கட்டியும் 30 நாட்களுக்கு மேலாகியும் நில அளவை செய்யாமல் இழுத்தடிக்கின்றனர் மற்றும் மேற்கொண்டு எந்த தகவல்களையும் பொது மக்களுக்கு தெரிவிப்பதில்லை பெரும்பாலும் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய பொதுமக்கள் தாலுகா அலுவலகம் வந்தாலும் பெரும்பாலும் ஊழியர்கள் தங்களது இருக்கையில் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது .அதற்கான ஊழியர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் ஊழியர்கள் பொதுமக்களின் தொலைபேசியை எடுத்து பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. நில அளவைப் பிரிவை பொருத்தவரை விண்ணபித்த 30 நாட்களுக்குள் அளக்காத சர்வேயர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையிலும் இன்றும் முழுமையாக செயல்படுத்தாமல் இருந்து வருகின்றனர்.( 30 நாட்களுக்குள் நில அளவை செய்யாத சர்வேயர் எத்தனை நபர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள் அல்லது எத்தனை நபர்கள் மீது எந்த மாதிரியான விசாரணை நடத்தப்பட்டது என்ற குறித்த தகவல் இல்லை) நில அளவையார்கள் நில அளவைக்கு பணம் கட்டி முப்பது நாட்களுக்குள் அளக்காமல் நில உரிமையாளரின் வருகைக்காக காத்திருக்கின்றனர் சம்திங் கொடுத்தால் மட்டுமே முன்னுரிமை கொடுத்து நில அளவை செய்யபடுவதாக தெரிகிறது. உட்பிரிவு அளவிற்கு ரூபாய் நானூறு ஆன்லைனில் செலுத்த ஒரு ஆன்லைன் கடையை கை காமிக்கின்றனர் அங்கு 400 ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் போக 100 ரூபாய் (25%)அதிகமாக வசூல் செய்கின்றனர் இதிலும் நில தலமை நில அளவையருக்கு சம்திங் கமிஷன் இருப்பதாக தெரிகிறது. இது குறித்து தலைமை நில அளவைரிடம் கேட்டபோது நிலம் அளக்க வேண்டும் என்றால் பணம் செலவழிக்க தான் வேண்டும் என்பதுபோல் பொறுப்பில்லாமல் பேசுகிறார் ஆன்லைன் பயன்படுத்த தெரிந்தவர்கள் தங்கள் கைபேசி மூலம் பணம் கட்டி விடுவார்கள் பாமர ஏழைகள் மற்றும் கைபேசி மூலம் கட்டணம் செலுத்த தெரியாத பாமரமக்களை பற்றி கவலைப்படாமல் தலைமை அளவையார் பேசுவது தனது பணிக்கு சிறப்பில்லை. இவர்கள் ஏழைகளுக்கும் பாமரமக்களுக்கும் பணி செய்யாமல் வசதி படைத்தவர்களை தன் அருகில் அமர வைத்து ராஜ மரியாதையுடன் பணி செய்து வருகின்றனர். இதுபோன்று தூத்துக்குடி தாலுகா அலுவலக நில அளவை சர்வேயர் நிர்வாகத்தில் பல குளறுபடிகள் உள்ளதால் பொதுமக்கள் நில அளவை பிரிவு அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர் .அரசின் மீது கெட்ட பெயரை ஏற்படுத்தும் விதத்தில் அரசின் விதிகளை மதிக்காமல் செயல்படும் ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் செயல்பாடுகள் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ள நிலையில் மேயர் ஜெகன் பெரியசாமி தன்னால் முடிந்த மட்டும் பொதுமக்களுக்கள் நலனுக்கு உழைத்து வரும் நிலையில் இது போன்ற அரசு ஊழியர்களின் செயல்பாடு அரசுக்கு கட்ட பெயர் ஏற்படுத்துவதாக உள்ளது அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். அரசு கட்டணம் 400 ரூபாய் செலுத்துவதற்கு அதிகமாக 100 ரூபாய் வசூல் செய்த ஆன்லைன் கடை மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தூத்துக்குடி அரசு கேபிள் தாசில்தார் தெரிவித்தார்.