தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தரமற்ற பொருட்களால் இறகு பந்து மைதானம் கட்டுப்படுவதாக குற்றம் சாட்டி பொதுமக்கள் பணிகளை தடுத்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
ஷ்யாம் நியூஸ்
19.11.2022
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தரமற்ற பொருட்களால் இறகு பந்து மைதானம் கட்டுப்படுவதாக குற்றம் சாட்டி பொதுமக்கள் பணிகளை தடுத்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு.
தூத்துக்குடியில் உள்ள அசோக் நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதியதாக இறகு பந்து மைதானம் கட்டப்பட்டு வருகிறது.இதில் இறகு பந்து விளையாடுவதற்கு தளம் மரப்பலகையால் அமைக்கப்பட்டு வருகிறது இந்த மரப்பலகை தரமற்ற மரப்பலகை ஆகும் பெவிகால் போட்டு ஓட்டுவதால் இறகு பந்து விளையாடும் போது தளம் உடைந்து விடும் என இறகு பந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதற்கு மாநகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வார்டு மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ் தலைமையில் அப்பகுதி மக்கள் மற்றும் இறகு பந்து வீரர்கள் புதியதாக அமைக்கப்படும் இறகு பத்து மைதானத்தில் பணியை தடுத்து நிறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இதுபோன்று தூத்துக்குடியில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகளை ஒப்பந்ததாரர்களை சுதந்திரமாக பணி செய்ய விடாமல் வார்டு கவுன்சிலர்கள் கமிஷன் கேட்டு தொடர்ந்து வற்புறுத்தி வருவதால் பணிகள் மந்தமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்சி வருகின்றனர் தூத்துக்குடி மாநகராட்சியை முன்மாதிரி மாநகராட்சியாக மாற்றுவதற்கு மிகுந்த முயற்சி எடுத்து வரும் மாநகராட்சி மேயர் ஜெகன் ஸ்மார்ட் சிட்டப் பணிகள் தாமதமாவதற்கான காரணத்தை அறிந்து தக்க நடவடிக்கை எடுத்து ஸ்மார்ட் பணித்திட்டத்தை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கருத்து தெரிவித்தனர்