ஷ்யாம் நியூஸ்
19.11.2022
தூத்துக்குடியில் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி.
தூத்துக்குடியில் உள்ள கேம்ஸ் வில்லி அகடாமி மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர் வரும் நவம்பர் 26 முதல் டிசம்பர் 3 வரை நடைபெறும் தேசிய அளவிலான இந்த போட்டி ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர் தூத்துக்குடியில் உள்ள கேம்ஸ்வில்லி ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் தமிழகத்திலிருந்து தஞ்சாவூர் வேலூர் தூத்துக்குடி திருப்படிப்பூண்டி தென்காசி ராணிப்பேட்டை சென்னை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர் .ஏழு அணிகளுடன் தமிழக அணி எதிர்த்து விளையாட உள்ளது. பயிற்சியாளர் துரைபாண்டியன் தலைமையில் தமிழகத்திலிருந்து 16 வீரர்கள் கொண்ட அணி போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறது .கடந்தாண்டு தோல்வியை தழுவிய அந்த அணி இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றுவோம் என்று முழு முயற்சியுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் மாற்றுத்திறனாளிக்கான கிரிக்கெட் விளையாட்டு போட்டியினை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் தற்போது தனியார் பங்களிப்புடன் செயல்பட்டு வரும் கிரிக்கெட் வீரர்களை அரசு ஊக்கப்படுத்தி தனது பங்களிப்பை செலுத்தினால் இன்னும் ஊக்கத்துடன் விளையாடி வெற்றி பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்ப்போம் என்று விளையாட்டு வீரர்கள் கூறினர்