தூத்துக்குடி மாநகராட்சி புதிய வணிக வளாக கடைகள் இட ஒதுக்கீடு அடிப்படையில் வழங்க வேண்டும். இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆணையரிடம் மனு வழங்கப்பட்டது.
ஷ்யாம் நியூஸ்
21.11.2022
தூத்துக்குடி மாநகராட்சி புதிய வணிக வளாக கடைகள் இட ஒதுக்கீடு அடிப்படையில் வழங்க வேண்டும். இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆணையரிடம் மனு வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வரும் வணிக வளாகங்கள் எஸ்சி எஸ்டி மக்களுக்கான இட ஒதுக்கீடு சதவீத அடிப்படையில் வழங்க வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சி மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் ஆணையர் சாருஸ்ரீயிடம் மனு வழங்கினார்
அந்த மனுவில் தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கீழ் சிறப்பாக பணிகள் நடைபெற்று வருகிறது இந்திய குடியரசு கட்சி(G) இதனை வரவேற்கிறது இச்செயலாக்கத்தின் ஒரு பகுதியாக புதிய வணிக வளாகங்கள் கட்டி வருவதால் தூத்துக்குடி ஷெட்யூல்ட் இன மக்களைச் சார்ந்தவர்களுக்கு 18 +1 சதவீத அடிப்படையில் கடைகள் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒதுக்கப்பட்டு அவர்களும் வியாபார தொழிலில் முன்னேற்றம் அடைய வழி வகுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.