ஷ்யாம் நியூஸ்
20.11.2022
தனியார் ராக்கெட் விட்டுள்ளது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.தூத்துக்குடியில் இஸ்ரோ சிவன் பேட்டி!
தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தனியார் ராக்கெட் விட்டுள்ளது ரொம்ப நல்ல காரியம். இது தொடக்கம் தான். மென் மேலும் பெரிய ராக்கெட் ஏவபட உள்ளது . சந்தோசமாக இருக்கிறது. இதனால் பல புதிய நிறுவனங்கள் ராக்கெட் உருவாக்குவதற்கும, சாட்டிலைட் உருவாக்குவதற்கும், அப்ளிகேஷன் உருவாக்குவதற்கும் வருகின்றனர்.
சந்திராயன் அடுத்த ஆண்டு ஏவப்பட உள்ளது என்று தெரிவித்தார். குலசேகரப்பட்டணம் ராக்கெட் ஏவு தளத்திற்கான நிலம் கையெடுப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இனி ராக்கெட் ஏவுதளம் உருவாக்குவதற்கான பணிகள் தொடங்குவார்கள். முதலில் டிசைன் வேலை பார்த்து விட்டு, மண் பரிசோதனைக்கு பிறகு ராக்கெட் ஏவுதளம் உருவாக்கும் பணிகள் தொடங்கும் என்றார்.