தூத்துக்குடியில் தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்யக்கோரி எஸ்பி இடம் பாஜகவினர் புகார் மனு கொடுத்தனர்
ஷ்யாம் நியூஸ்
19.11.2022
தூத்துக்குடியில் தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்யக்கோரி எஸ்பி இடம் பாஜகவினர் புகார் மனு கொடுத்தனர்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கே கைலாசபுரம் கிராமத்தில் புளியம்பட்டி திருத்தல கத்தோலிக்க திருச்சபை சார்பாக rc தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இதில் உள்ளூர் வெளியூர் மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர் .தலைமை ஆசிரியராக அல்பர்ட் கென்னடி என்ற ஆசிரியர் பணிபுரிந்து வருகிறார். கல்வி போதிக்கும் ஆசிரியர் கடவுளுக்கு நேராக மதிக்கப்படுவது மரபு ஆனால் ஆசிரியரே ஒழுக்ககேடான செயல்களை பல நாட்களாக மாணவிகள் மீது பாலியல் செயலில் ஈடுபட்டுள்ளார் மாணவிகளின் அந்தரங்க பாகங்களை தொடுவது தவறான முறையில் பேசுவது என பல சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்து வந்தது தெரிய வருகிறது. இது வேதனை தரும் செயல் மாணவிகள் பல நாட்களாக ஆசிரியரின் மிரட்டலான வார்த்தைகளுக்கு பயந்து வீட்டில் சொல்லாமல் மன அழுத்தத்துடன் இருந்து வந்துள்ளனர் இதற்கு முன்னும் பல குற்றங்களை செய்து தந்த இந்த ஆசிரியர் மீது பல முறை புகார் அளித்து நடவடிக்கை எடுக்காத புளியம்பட்டி கத்தோலி கத்தரி சபையின் நிர்வாகி பங்குதந்தை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது கண்டனக் கூறியது இதை மாவட்ட கல்வி அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆல்பர்ட் கென்னடி இதற்கு முன் வேலை செய்த புளியம்பட்டியில் உள்ள ஆர்சி நடுநிலைப் பள்ளிகளும் இதுபோன்ற தவறு செய்துள்ளார் என்றும் புளியம்பட்டி அந்தோணியார் திருத்தளத்தில் பணிபுரிந்தார் பாதிரியார் சுகமாக பேசி சமரசம் பேச்சு வார்த்தை செய்து கைலாசபுரம் ஆர் சி தொடக்கப்பள்ளிக்கு பணி மாறுதல் செய்து வைத்ததாகவும் இது போன்ற தவறு செய்யும் ஆசிரியர்களை தண்டிக்காமல் பணம் வாங்கிவிட்டு பல குற்றங்களை மறைத்துள்ளனர் ஆகவே ஆல்பர்ட் கென்னடி ஆசிரியரை மறுவிசாரணை செய்து வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தில் கைது செய்து தக்க நடவடிக்கை வேண்டும் என்று எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் கூட்டுறவு பிரிவு முருகேசன் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் மனு கொடுத்தனர்.