தனியார் டவர் அமைக்க பொதுமக்கள் சிலுவைப்பட்டியில் போராட்டம் சண்முகையா எம்.எல்.ஏ பேச்சு வார்த்தைக்கு பின் வாபஸ்
ஷ்யாம் நியூஸ்
11.11.2022
தனியார் டவர் அமைக்க பொதுமக்கள் சிலுவைப்பட்டியில் போராட்டம் சண்முகையா எம்.எல்.ஏ பேச்சு வார்த்தைக்கு பின் வாபஸ்
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் சுமார் 1.50 லட்சம் பொதுமக்கள் 58 கிராமங்களோடு வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதியில் புதிய கட்டுமான பணிகள் உள்ளிட்ட சில பணிகளுக்கு அரசின் அனுமதி பெற்று செய்ய வேண்டும். என்ற விதிமுறை இருந்து வருகிறது. அதிக ஜனத்தொகை கொண்ட ஊராட்சி பகுதியில் பொதுமக்கள் குடியிருக்கும் சிலுவைப்பட்டி பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் புதிதாக செல்போன் டவர் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை நான்கு மாதங்களுக்கு முன்பு துவக்க பணியை ஆரம்பித்த போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை கைவிட்ட நிறுவனம் வியாழன் அன்று இரவு மீண்டும் அப்பணியை துவக்கி கம்பிகட்டும் பணிகளை தொடங்கியுள்ளனர். தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் போராட்டம் நடத்தி தொடர் போராட்டமாக நடைபெற்ற நிலையில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிடம் இதுகுறித்த தகவல்களை தெரிவித்தார். இதனையடுத்து போராட்டம் நடத்திய சம்பவ இடத்திற்கு வந்து சண்முகையா எம்.எல்.ஏ புதிதாக டவர் அமைக்கும் பகுதியை பார்வையிட்டு அதன் சம்பந்தப்பட்ட பணியாளர்களிடம் இந்த பகுதியில் டவர் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். வேறு காட்;டு பகுதியில் அமைத்துக்கொள்ளுங்கள் என்று கூறியதையடுத்து அந்நிறுவன ஊழியர்கள் கைவிடுவதாக தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
பின்னர் சண்முகையா எம்.எல்.ஏ கூறுகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகின்ற அரசு மக்களுக்கான அரசாகும் எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எந்த திட்டமாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது இந்த பகுதியை சேர்ந்து பொதுநல அமைப்புகள் மகளிர் சுயஉதவிகுழுக்கள் என ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதனடிப்படையில் இந்த புதிய டவர் அமைக்கும் திட்டத்தை அந்த நிறுவனம் கைவிடுவதாக கூறியுள்ளது. மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என்பதை உணர்ந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்தார்.
மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான கிழக்கு ஒன்றிய திமுக செயலளர் சரவணக்குமார், சிபிஎம்; ஒன்றிய செயலாளர் சங்கரன், வக்கீல் மாடசாமி, ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்;பாண்டி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, பெலிக்ஸ், தங்கபாண்டி, பாலம்மாள்,
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ், வருவாய் ஆய்வாளர் வேல்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் அமலநாதன்,
தாளமுத்துநகர் சப் இன்ஸ்பெக்டர்கள் சதிஸ்குமார், முனியசாமி, சமூக ஆர்வலர் சசி, வின்சென்ட், ஜெகதீஸ்வரன், மைக்கேல், வக்கீல் பால்துரை, அனிஸ்மெல்வின். மற்றும் கௌதம், உள்பட பலர் உடனிருந்தனர்.