ஷ்யாம் நீயூஸ்
29.11.2022
தூத்துக்குடி 3ஆம் புத்தக திருவிழா நிறைவு நாள் விழா!கனிமொழி எம்.பி கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் 3வது புத்தகத் திருவிழா கடந்த 22 ஆம் தேதி தூத்துக்குடி தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள கமலம் மகாலில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி.எம்.பி. சமூக நலன் மற்றும் பெண்கள் பாதுகாப்பு அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மற்றும் மாநகர ஆணையர் சாரு ஸ்ரீ ஆகியோர் தொடங்கி வைத்தனர். கடந்த 22 ஆம் தேதி தொடங்கப்பட்ட புத்தக திருவிழா 29 11 2022 நாளான இன்று நிறைவு விழா நடைபெற்றது. எட்டு நாள் நடைபெற்ற இந்த புத்தகத் திருவிழாவில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வந்து பொதுமக்கள் கல்வி ஆர்வலர்கள்,மாணவ மாணவிகள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி பயன் அடைந்தனர். நிறைவு விழாவான இன்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பள்ளி மாணவ மாணவியர்கள் தொகுப்பாளர்கள் ஆசிரியர்களுக்கு பரிசுகளும் சான்றுகளும் வழங்கினார். விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் மாநகர ஆணையர் சாருஸ்ரீ, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இன்று நடந்த கடைசி நாள் விழாவில் ஏராளமான பள்ளி மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு புத்தகங்கள் வாங்கிய பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.