தூத்துக்குடி ஆதி திராவிட மக்களுக்கு அரசு வழங்கிய இடத்தில் வீடு கட்டித்தர வேண்டி கலெக்டர் செந்தில்ராஜுடம் இந்திய குடியரசு கட்சி கோரிக்கை!
ஷ்யாம் நியூஸ்
12.11.2022
தூத்துக்குடி ஆதி திராவிட மக்களுக்கு அரசு வழங்கிய இடத்தில் வீடு கட்டித்தர வேண்டி கலெக்டர் செந்தில்ராஜுடம் இந்திய குடியரசு கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது
இந்திய குடியரசு கட்சியின் மாநில துணைத் தலைவர் நெல்லை நெப்போலியன் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜுடம் நேற்று (11 /11 /2022) தூத்துக்குடி மாப்பிள்ளை யூரணியில் ஆதி திராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட சிவகாமி IAS நகரில் வீடு கட்டித் தரக் கோரி மனு கொடுத்தார். அந்த மனுவில் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் ஆதிதிராவிட மக்களுக்கு தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறையால் வழங்கப்பட்ட பட்டா இடத்தில் எந்தவித அடிப்படை வசதி இல்லாமலும் மக்கள் சுயமாக குடியேற முயற்சித்தால் சமூக விரோதிகளால் பயமுறுத்தப்பட்டும் தாக்கப்பட்டும் அல்லல்பட்டு வருகின்றனர் ஆகவே பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் அல்லது தமிழக அரசால் வழங்கப்படும் இலவச வீடு கட்டும் திட்டத்தில் சிவகாமி ஐஏஎஸ் நகரில் பட்டா உள்ள அனைவருக்கும் இலவச வீடு கட்டித் தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.