முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நவம்பர் 1 உள்ளாட்சி தினம் அறிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து மாப்பிள்ளையூரணி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

 ஷ்யாம் நியூஸ்

01.11.2022

நவம்பர் 1 உள்ளாட்சி தினம் அறிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து மாப்பிள்ளையூரணி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

தூத்துகுகுடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட் மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிராமசபை கூட்டம் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் உள்ளாட்சி தின விழா ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் மாப்பிள்ளையூரணி குளக்கரையில் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் கேள்விகள் எழுப்பினார்கள். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கவுரை வழங்கினார்கள்.

    ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் கிராமசபை கூட்டத்தில் பேசுகையில் மாப்பிள்ளையூரணி வளர்ச்சிக்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி பல்வேறு சாலை மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மாவட்ட கலெக்டருக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார். அதன்படி அனைத்து பகுதிகளிலும் உள்ள வார்டு உறுப்பினர்களின் குறைகளை கேட்டு ஊராட்சி நிர்வாகம் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் சிறந்த ஊராட்சியாக வளர்ச்சியடைவதற்கு மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து பொதுமக்கள் வழங்க வேண்டும். நெகிழிகளை தவிர்த்து சாலைகளில் குப்பைகளை கொட்டாமல் தூய்மை காவலர்களிடம் கொடுக்க வேண்டும். அனைவருடைய ஓத்துழைப்பு அவசியம் என்று கேட்டுக் கொண்டார். கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை காவலர்கள் பணியாளர்கள் 73 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நவம்பர் 1 உள்ளாட்சி தினம் அறிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தல். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் கணக்கெடுப்பு வடகிழக்கு பருவமழை குறித்து முன்னெச்சரிக்கை புதிய மகளிர் சுயஉதவிக்குழுக்கள் இணையவழி மூலம் வீட்டுவரி சொத்துவரி செலுத்துதல் 2021 22 மற்றும் 22 23 ஆகிய ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் பன்னை மற்றும் பன்னை சாரா திட்ட இனங்கள் மேற்கொள்ளப்படுதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     கூட்டத்தில் மீன்வளத்துறை மேற்பார்வையாளர் சக்திஉடையார், தூத்துக்குடி ஊராட்சி ஓன்றிய மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் மகேஷ்குமார், மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன்சங்க செயலாளர் பாலமுருகன், கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் வினோத்,  சுகாதார ஆய்வாளர் வில்சன், ரேசன்கடை பணியாளர் பிரபாகர், ஊரக வளர்ச்சி வாழ்வாதார இயக்க மகளிர்திட்டம் ஓருங்கிணைப்பாளர் அங்காளஈஸ்வரி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி, தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஒன்றிய துணைச்செயலாளர் கணேசன், ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலண், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, மகேஸ்வரி காமராஜ், வசந்தகுமாரி, தங்கமாரிமுத்து, சக்திவேல், தங்கபாண்டி, பெலிக்ஸ், ராணி, மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, தாளமுத்துநகர் சப்இன்ஸ்பெக்டர்கள் முத்தையா, சதிஷ்குமார்,  மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன்சங்க துணைத்தலைவர் சிவக்குமார், தனிப்பிரிவு ஏட்டு முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் அமலநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், கிளைச்செயலாளர் காமராஜ், மற்றும் கௌதம் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...