ஷ்யாம் நியூஸ்
16.04.2020
ஸ்டெர்லைட் ஆலைக்கு என்ன திண்ணால் பித்தம் தெளியும் ?சமூக ஆர்வலர் கேள்வி ?
ரேசன் அரிசியை, பொன்னி அரிசி பையில் அடைத்து பொதுமக்களுக்கு விநியோகித்த ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் .!குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் கோரிக்கை வைத்து உள்ளார் .
கொரானா வைரஸ் தடுப்பு காரணமாக அரசு பிறப்பித்த உத்தரவின் கீழ் பொதுமக்கள் தங்களது பல்வேறு பொருளாதார நெருக்கடிகளையும் இன்னல்களையுடம் தாண்டி கடந்த சில வாரங்களுக்கு மேலாக வீட்டிலே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.இத்தகைய மக்களின் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்திட அரசுகள் முயற்சித்து வருகிறது மேலும் தன்னார்வலர்கள் மற்றும் இன்னபிற சுய உதவி அமைப்புகள் பொதுமக்களை சந்தித்து உதவிகள் செய்திட வழிவகைகளை வகுத்துள்ளது.
இத்தகைய சூழலில் ஸ்டெர்லைட் ஆதரவாளரும், இந்து டிரேடர்ஸ் உரிமையாளருமான பாலா என்பவர் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில் தூத்துக்குடி போல்டன்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார நகரப் பகுதிகளில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகிகள் மற்றும் பாலாவின் ஆதரவாளர்கள் இணைந்து அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்டு வரும் ரேசன் அரிசியை தனியார் வேல் பிராண்ட் பொன்னி அரிசி பையில் அடைத்து பொதுமக்களுக்கு விநியோகித்து உள்ளனர்.
இவ்வாறு வழங்கப்பட்ட அரிசி பையை பிரித்து பார்த்த பொதுமக்கள் இது ரேசன் அரிசி என்றும் ரேசன் அரிசியை மொத்தமாக கடத்தி அதனை பாலிஷ் (மறு அரவை) செய்து அதனை தனியார் பொன்னி அரிசி பிராண்ட் பையில் வழங்கியதை கண்டு அதிர்ச்சியுற்றதோடு இதற்கு உடந்தையாக இருந்த ஸ்டெர்லைட் நிர்வாகிகள் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவாளர் பாலாவை எச்சரித்ததோடு அவ்வாறு பெறப்பட்ட அரிசை ரோட்டில் வீசி எறிந்துள்ளனர்.
அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் ரேசன் அரிசி மொத்தமாக ஸ்டெர்லைட் ஆதரவாளர் கந்துவட்டி பாலா வசம் சென்றது எப்படி.?
ரேசன் அரிசி மொத்தமாக கிடைப்பதற்கு பாலாவிற்கு உடந்தையாக(துணையாக) இருந்த பொதுவிநியோக திட்ட அரசு அதிகாரிகள் யார்.?
ஸ்டெர்லைட் நிர்வாகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் குறிப்பாக பாலா மற்றும் அவரது கூட்டாளிகள் யாரின் அனுமதியோடு இதுப் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டனர்.
அரசு சார்பில் வழங்கப்படும் ரேசன் அரிசி யை சட்டவிரோதமாக கடத்தி அதனை முறைகேடாக பொன்னி அரிசி பையில் அடைத்து பொதுமக்களுக்கு விநியோகித்த ஸ்டெர்லைட் ஆதரவாளர் பாலா மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்படுமா.?
ரேசன் அரிசியை கடத்தி அதனை பாலிஷ் செய்து பொன்னி அரிசி பையில் அடைத்து சட்டவிரோதமாக விநியோகம் செய்த ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவாளர் பாலா, முறைகேடாக பை வழங்கிய வேல் அரிசி நிறுவனம், மற்றும் அரிசி கடத்தலை கண்டுக்கொள்ளாத அரசு அதிகாரிகள் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுக்க படுமா என சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் கேள்வி எழுப்பி உள்ளார் .மற்றும் ஆட்சித்தலைவர் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் . தூத்துக்குடியில் தொடர்ந்து ஸ்டெர்லைட் நிர்வாகம் என்ன திண்ணால் பித்தம் தெளியும் என தெரியாமல் மக்களுக்கு தவறான செய்தியை பரப்பியும் மக்களுக்கு ஆசை வார்த்தை கூறியும் ஏமாற்றி வருவதை இத்தோடு நிறுத்து கொள்ளவேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர் .இச்சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .