ஷ்யாம் நியூஸ்
14.04.2020
தூத்துக்குடியில் கருடன் வட்டமிட அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார் ஆட்சியர் !
14.04.2020
தூத்துக்குடியில் கருடன் வட்டமிட அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார் ஆட்சியர் !
இந்திய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 129 பிறந்தநாளான இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது . இந்த நிலையில் நாடெங்கும் கொரானா எதிரொலியாக 144 தடை சட்டம் அமலில் உள்ளதால் கொரானா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளான இன்று அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அரசியல் கட்சிகள் தலைவர்களுக்கு அரசுஅனுமதி வழங்கவில்லை.ஆனால் அரசு சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் என அரசு அறிவித்திருந்தது.அதன் படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்துரி தெற்க்கு காவல் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும்போது வானில் கருடன் வட்டம் அடித்து மரியாதை செலுத்தியது என்பது கூடுதல் செய்தி.