ஷ்யாம் நியூஸ்
19.04.2020
தூத்துக்குடி துப்புரவு பணியாளர்களை ஒருமையில் பேசும் மாநகராட்சி அதிகாரிகள்!ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?
உலக முழுவதிலும் கொரானா தொற்று பரவலால் மக்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு வீட்டில் இருக்கும் போது சுகாதார பணியாளர் தங்கள் உயிரை பணயம் வைத்து பணிசெய்து கொரானா தொற்று பரவலை தடுக்க தெருக்களை ஓய்வின்றி சுத்தம் செய்து வருகின்றனர்.தூத்துக்குடியில் அனைத்து பகுதிகளிலும் துப்புரவு பணியாளர்கள் செய்த பணியால் கொரானா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது தூத்துக்குடி மாவட்டம் கொரானா தொற்று பரவலை தடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது என இன்று தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்துரிக்கு மண்டல பொறுப்பாளர் கருணாகரன் இஆப பாராட்டுதெரிவித்திருந்தார்.ஆனால் நேற்று தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தால் 2000 பணியாளர்களுக்கு அரிசி உட்பட வீட்டிற்கு தேவையான பொருட்கள் மற்றும் பணம் வழங்குவதற்கு விளம்பரம் மற்றும் செய்தித்துறை அமைச்சர் வருவதாக இருந்தது அமைச்சர் மற்றும் ஆட்சியர் வருவதற்கு முன்பாக சமுதாய இடைவெளி விட்டு இருப்பதற்கு பயன்பெறும் துப்புரவு பணியாளர்களை தயார் செய்யும் போது அந்த துப்புரவு பணியாளர்களை நீ அங்க நில்லு" அவளை உனக்கு பின்னால் நிக்கசொல்லு" அவனை அந்த கையுறையை கொடுக்கு சொல்லு" நீ இந்த அடையாள அட்டையை போட்டுக்கோ" என மாநகராட்சி அதிகாரிகள் ஒருமையில் துப்புரவு பணியாளர்களை பேசினர்.அதை பொருட்படுத்தாமல் அந்த பணியாளர் எஜமான் சொல்வதை அடிமை கேட்பதுபோல் கேட்டு அமைச்சர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வரிசையில் நின்றனர் பின்பு அந்த துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி போன்ற பொருட்கள் அமைச்சர் கடம்பூர் ராஜ்வால் வழங்கப்பட்டது.சுகதார பணியாளர்களால் கொரானா தொற்று பரவல் தடுக்கப்பட்டு வருகிறது.அவர்களும் மனிதர்கள்தான் அவர்களிடம் மரியாதையாக பேசலாமே !இனியாவது மாறுமா ? ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் நடவடிக்கைகள் எடுப்பார்களா?