ஷ்யாம் நியுஸ்
23.04.2020
ஸ்டெர்லைட் கொடுத்த கொரானா நிதியை திருப்பி கொடுக்கவேண்டும்! ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு கோரிக்கை!
ஸ்டெர்லைட் நிறுவனம் கொரோனா நிவாரண நிதியாக 5 கோடி ரூபாய் வழங்கியதை தமிழக அரசு திரும்ப ஸ்டெர்லைட் நிறுவனத்திடமே ஒப்படைக்க வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் மூடக்ஆலையைமூட கோரியநடந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடில் 13க்கும் மேற்ப்பட்ட கொல்லப்பட்டனர் இதனை தொடர்ந்து தமிழக அரசு ஆலையை நிரந்தரமாய் மூடுவதற்காக அரசாணை பிறப்பித்து, பூட்டி சீல் வைத்துள்ளது.
அதன் பின்பு ஆலை தரப்பில் தமிழக அரசாணையை இரத்து செய்து, மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கில் தமிழக அரசு, உச்ச நீதிமன்ற பிரபல சீனியர் வழக்கறிஞர்களை நியமித்து சிறப்பாக வாதாடி உள்ளதை நாங்கள் அறிவோம். இதனால் தமிழக அரசின் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா நிவாரண நிதியாக 5 கோடி ரூபாயை தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் கொடுத்திருப்பது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
எங்களது கிராமங்களில் ஸ்டெர்லைட் நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில், மக்களை பிளவுபடுத்த ஸ்டெர்லைட் ஆதரவாளர்களுக்கு சில உதவிகள் வழங்கப்பட உள்ளதை அறிந்து தாசில்தார், மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு உள்ளோம். ஆனால் தற்போது தமிழக அரசிற்கு நிவாரண நிதி என்ற பெயரில் ஸ்டெர்லைட் கொடுப்பதை நாங்கள் யாரிடம் போய் முறையிடுவது?
ஸ்டெர்லைட் நிறுவன நிர்வாகிகள், அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் ஸ்டெர்லைட் நிறுவனம் கொடுத்த ஐந்து கோடியை வைத்து தமிழக அரசை அந்த நிறுவனம் வளைத்து போட்டுவிட்டதாகவும், இனி தமிழக அரசின் நீதிமன்ற நடவடிக்கைகள் உட்பட எல்லாமே நீர்த்துப்போகும் என்று ஒரு பீதியை பரப்புகிறார்கள்.
இதன்மூலம் தமிழக அரசுடன் ஸ்டெர்லைட் நிறுவனம் நெருக்கமாக இருப்பதாக காட்டிக் கொள்வதால், வரவிருக்கின்ற நீதிமன்ற தீர்ப்பில் செல்வாக்கு செலுத்த முடியும் என்று ஆலை தரப்பில் தூத்துக்குடி மக்களிடம் ஒரு செய்தியை திட்டமிட்டே கசிய விடுகிறார்கள்.
இதனால் "ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் திறக்கப்பட்டுவிடும்" என்று தூத்துக்குடி மக்கள் பயப்படுகிறோம்..
தமிழக அரசு 5 கோடி பெற்றுக் கொண்டதன் மூலம், அரசு ஸ்டெர்லைட்டை மூட இதற்கு முன்னர் எடுத்த எல்லா நடவடிக்கைகளும் நீர்த்துப்போய், கேள்விக்குள்ளான சூழ்நிலையை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.
ஸ்டெர்லைட் நிறுவனம், தமிழக அரசிடம் 5 கோடியை நிவாரண உதவித் தொகையாக கொடுத்துவிட்டு, தமிழக அரசிற்கு லஞ்சம் கொடுத்து சரிக்கட்டி விட்டதாக ஆதரவாளர்கள் மூலம் பொய் செய்தியை அரசிற்கு எதிராக பரப்பி வருகிறார்கள்.
மேலும் தமிழக அரசின் பல்வேறு துறைகளையும், நீதிமன்றத்தையும் திசை திருப்பும் செயலாகும்.
எனவே, . தமிழக முதல்வர் ,5 கோடி ரூபாயை தூத்துக்குடி மக்களின் ஒட்டுமொத்த வேண்டுகோளின் படி ஸ்டெர்லைட் நிறுவனத்திடமே திரும்ப கொடுத்து விடுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். என்றும்
அதைப்போல ஸ்டெர்லைட் நிறுவனம் கொரோனா நிவாரண பொருட்களை நேரடியாக மக்களிடம் எந்தவித சமூக இடைவெளியையும் பின்பற்றாமல், ஆதரவாளர்களை வைத்து கொடுத்து வருகிறார்கள். நிவாரண பொருட்கள் கொடுப்பதை சாக்காக வைத்து, முறைகேடாக பயன்படுத்துவதற்காக பயனாளர்களின் ஆதார் கார்டுகளை பெற்று, ஆலையை மீண்டும் திறக்க விஷமப் பிரச்சாரம் செய்வதை தடை செய்ய, மாவட்ட நிர்வாகத்திற்கு உத்ரவிடவேண்டும் என்றும் தமிழக முதல்வர்க்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு எழுதிய மணுவில் தெரிவித்துள்ளனர்.