தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரசுக்கு முதல் பலி
தூத்துக்குடியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 72வயது மூதாட்டி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி போல்டன் புரத்தைச் சேர்ந்த சேர்ந்த 42 வயது நபருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அவருடன் பழகிய அவரது நண்பர், மற்றும் நண்பரின் மனைவி, 72 வயது மாமியாருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவர்கள் 3 பேருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்த 72 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பாக கருதப்படுகிறது. இதனால் பொது மக்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மூதாட்டியின் உடல், பாலித்தீன் கவர்களால் சுத்தப்பட்டு அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளின்படி அவருடைய உடல் தகனம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.