தூத்துக்குடியில் பட்டினியால் தவிக்கும் முதியவர்கள்! கண்டு கொள்ளாத மாநகராட்சி !நடவடிக்கை எடுக்க முதியவர்கள் கோரிக்கை .
தூத்துக்குடியில் பட்டினியால் தவிக்கும் முதியவர்கள்! கண்டு கொள்ளாத மாநகராட்சி !நடவடிக்கை எடுக்க முதியவர்கள் கோரிக்கை .
கொரானா வைரஸ் பரவலை தடுக்க 144 உத்தரவால் பிறப்பிக்க பட்ட ஊரடங்கை அடுத்து தூத்துக்குடியில் வசித்து வருவோரில் உணவின்றி தவிப்பவர்கள் செல்போனில் தொடர்பு கொண்டால் உணவு வழங்கும் ஏற்பாட்டை மாநகராட்சி செய்யும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்து இருந்தார் .
ஆனால் தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம் அம்பேத்கார் நகரில் பல முதியவர்கள் பசி பட்டினியால் தவித்து வருகின்றனர் .மார்ச் 31 ம் தேதி அப்பகுதியில் பல முதியவர்கள் இருக்கிறர்கள் கணக்கு எடுத்து அவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என தூத்துக்குடி தங்கசுடர் அறக்கட்டளை நிர்வாகி கலைச்செல்வி மாநகராட்சி அலுவலகத்தில் அப்பகுதியில் உள்ள முதியவர்கள் பெயர் பட்டியலை கொடுத்து உள்ளனர் .ஆனால் இன்று வரை அவர்களுக்கு உணவு வழங்க மாநகராட்சி உணவு வழங்காமல் இருந்து வருகின்றனர் ,இது தொடர்பாக அப்பகுதி முதியவர்களை நேரில் கேட்டபோது சாப்பிட்டு நான்கு நாள் ஆகிறது யாரும் உணவு கொண்டு வந்து தரவில்லை என சாலையோர முதியவர் தெரிவித்தார் .ஆணையாளர் தக்க நடவடிக்கை எடுத்து உடனடியாக உணவு வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் அப்பகுதி முதியவர்கள் தெரிவித்தனர் .