தூத்துகுடியில் கொரானா அச்சம் வேண்டாம் ! முதியவர் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும்: ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி
தூத்துகுடியில் கொரானா அச்சம் வேண்டாம் ! முதியவர் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும்: ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி
மேலும், செல்போன் தகவலின் அடிப்படையில் 3பேர் டெல்லி சென்றதாக அறியப்பட்டு, அவர்களும் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர். அதில் ஒருநபர் தூத்துக்குடி மாநகராட்சியைச் சேர்ந்தவர். அவர்களது ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் அறிவித்தபடி ரூ.1000 மற்றும் ரேசன் பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன்கள் நாள் ஒன்றுக்கு 100 பேர் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. வரிசையில் நிற்பவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட 2137பேருக்கும் பொருட்கள் வீடுதேடி வழங்கப்படும். இது தொடர்பான பணிகளுக்காக தன்னாருவலர்கள் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் மற்றும் பத்திரிகையாளர்கள் செய்திசேகரிப்பில் கவனமாக செயல்பட வேண்டும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.