தூத்துக்குடியில் பீடி குடித்த கூலி தொழிலாளி மீது வழக்கு பதிவு செய்த காவல்த்துறை -வேலையை இழந்து தவிக்கும் தொழிலாளிகள் ?
ஷ்யாம் நியூஸ்
30.04.2020
தூத்துக்குடியில் மூட்டை தூக்கும் தொழிலாளிகள் இருவர் மீது பீடி குடித்ததாக தூத்துக்குடி சிபிகாட் காவல்த்துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர் .
கொரானா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் ஏழை மக்கள் கூலி தொழிலாளிகள் இருப்பதை உண்டு
வீட்டில் ஒரு மாதமாக இருந்து வந்தனர் .இந்த நிலையில் தமிழக அரசு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசிய உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவங்கள் செயல் பட அனுமதி அளித்தது .
தூத்துக்குடி சிபிகாட் பகுதியில் மத்திய அரசு நிறுவனமான CWC குடோனில் கண்டைனர் பெட்டியில் உள்ள பொருட்களை ஏற்றி இறக்கும் பணி நடந்து உள்ளது .8 மணிக்கு தொடங்கிய பணியில் ஈடுபட்டிருந்த கூலி தொழிலாளி மு .பாலமுருகன் மற்றும் வினோத் ஆகிய இருவரும் காலை 9.30 மணியளவில்
குடோன்வெளிப்புறம் உள்ள கோட்டை சுவர் அருகே சிறுநீர் கழித்துவிட்டு களைப்பு போக சமூக இடைவெளி விட்டு இருவரும் பீடி குடித்ததாக தெரிகிறது .அப்போது அந்த வழியாக வந்த சிபிகட் காவல்த்துறைனர் இருவரின் செல்போனையும் பறித்துக்கொண்டு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர் அங்கு இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கூப்பிடும் பொது வரவேண்டும் என திருப்பி அனுப்பி வைத்து உள்ளனர் .திரும்பி வரும் பொது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணி முடிந்து விட்டதால் கூலி கிடைக்காமல் வீடு திரும்பிவிட்டனர் .ஏற்கனவே வறுமை 600 ரூபாய் கூலி கிடைக்கும் என்று வேலைக்கு வந்தால் பீடி குடிதற்ககாக எங்களை அழைத்து கொண்டு போய் கேஷ் போட்டுவிட்டார்கள் வேலையும் பறிபோய்விட்டது 600 ரூபாய் கூலியும் கிடைக்கவில்லை .வழக்கிற்கு நீதிமன்றத்தில் பணமும் கட்டணுமாம் .ஏழைகளை தேடி தேடி அவர்கள் வயிற்றில் அடிக்கும் காவல்த்துறை மீதி மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் அரசும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வயிற்று பிழைப்புக்கு வேலைக்கு வந்த கூலி தொழிலிகளிடம் வீரத்தை காட்டுவது சரிதானா என்றும் கூலி தொழிலிகள் வேதனை பட்டனர் .