ஷ்யாம் நியூஸ்
28.03.2020தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கொரானா தொற்று இல்லை_ ஆட்சியர் தகவல்.
மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விரைவாக கிடைக்க வியாபாரிகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.
144 தடை உத்தரவை தொடர்ந்து மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதில் உள்ள சிறமத்தை சரி செய்ய வாகனங்கள் மற்றும் அதில் ஈடுபடும் பணியாளர் களுக்கு தனி அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவித்தார்.உற்பத்தி பொருட்கள் விவசாய பொருட்கள் கொண்டு செல்ல வாகனங்கள் நகர்வதர்க்கு தாலுகா வாரியாக அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 16 நபர்கள் கொரானா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சோதனை செய்ததில் அவர்களுக்கு கொரானா தொற்று இல்லை .தற்போது 3நபர்களுக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது.
முதியோர்கள் கர்ப்பிணி பெண்கள் 108மற்றும் 102 க்கு தொடர்பு கொண்டு மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம்.
வெளிமாவட்ட நபர்கள் வராமல் இருக்க தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 15 செக்போஸ்ட் போடப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
ஹோட்டல்கள் திறந்து இருக்கும் ஆனால் பார்சல் உணவு மட்டுமே வாங்க அனுமதிக்கப்படுவார்கள்
முன்னேச்சரிக்கை நடவடிக்கை யாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 150 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளது அதுபோன்று கோவில்பட்டி விளாத்திகுளம் திருச்செந்தூர் திருவைகுண்டம் போன்ற தாலுகா அரசு மருத்துவமனைகளிலும் போதுமான படுக்கைகள் தயார்நிலையில் உள்ளன
பொதுமக்களுக்கு உதவி செய்ய தன்னார்வலர்கள் குழுக்கள் உருவாக்கப்பட்டு செயல்பட குழு அமைக்கப்படும்.
அனைத்து தெருக்களிலும் கிராமங்களிலும் கிரிமிநாசினி தெளிக்கும் பட்டு வருவதோடு விழிப்புணர்வும் செய்யப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரி தெரிவித்தார்.