தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கிய 138 மதுபாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது.
தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 138 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி தெர்மல்நகர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருமலை மற்றும் போலீசார் காதர் மீரன் நகரில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தியதில் அங்கு பதுக்கி வைத்திருந்த 138 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முருகேசன் மகன் ராமசந்திரன் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுபோல் நாலாட்டின்புதூர் சப் இன்ஸ்பெக்டர் அந்தோணி பிலிப் மற்றும் போலீசார் வணிக வளாகத்தில் சோதனையிட்டபோது 114 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.