தூத்துக்குடியில் பெண்ணிடம் 5½ பவுன் நகை பறிப்பு : ஹெல்மெட் மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
தூத்துக்குடியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5½பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி முனியசாமிபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் மூக்காண்டி இவரது மனைவி சோமசுந்தரி (38) நேற்று முனியசாமி புரம் 1வது தெருவில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சோமசுந்தரி கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.2லட்சம் ஆகும். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்