முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்டெர்லைட் விவகாரம்: குளறுபடிகளுக்கு யார் காரணம்?

தமிழ் எக்ஸ்பிரஸ் நியுஸ்

  • 15 அக்டோபர்
  •  2018
  • ஸ்டெர்லைட் விவகாரம்: குளறுபடிகளுக்கு யார் காரணம்?

    (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். 

    தமிழ் எக்ஸ்பிரஸ் நியுஸ் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)


    படத்தின் காப்புரிமைVEDANTA

    இந்தியாவில் சனநாயகத்தைத் தாங்கி நிற்கும் மூன்று தூண்களாக நீதித்துறை, நிர்வாகத்துறை, சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட பாராளுமன்றம் / சட்டமன்றம் ஆகியவற்றைக் கூறுவார்கள்.
    நிர்வாகத்துறை தவறிழைத்தால் அதை சரிசெய்வதாக ஆட்சியாளர்களும், சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட மக்கள் பிரதிநிதிதிகள் தவறிழைத்தால் அதை சீராய்வு செய்வதாக நீதித்துறையும் இருக்கவேண்டும் என்ற நம்பிக்கையில்தான் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய நமது முன்னோர்கள் அதிகாரத்தை இந்த மூன்று அமைப்புகளுக்கும் பகிர்ந்தளித்தார்கள்.
    ஆனால், ஒன்றின் தவறை தட்டிக்கேட்டு சரிசெய்ய வேண்டிய இன்னொரு அமைப்பு, ஒன்றின் தவறைத் தனது தவறால் மறந்துபோகச் செய்கிற அவலமான நிலை உருவாகுமென்று அவர்கள் கற்பனைகூட செய்திருக்கமாட்டார்கள். ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் இவ்வளவு பெரிய கலவரமாக வெடிப்பதற்கும் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கும் இந்த மூன்று அமைப்புகளின் தோல்வியுமே காரணமாகும்.
    நிர்வாகத்துறையின் தவறு:
    ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதியளித்தது முதல் இப்போதுவரை அதிகார வர்க்கத்தாலான நிர்வாகத்துறை அடுக்கடுக்காகப் பல தவறுகளைச் செய்திருக்கிறது. ஆலைக்கு அனுமதி அளிக்கப்பட்டபோதே இந்தியாவின் சுற்றுச்சூழல் சட்டங்களோ அறிவிக்கைகளோ முறையாகப் பின்பற்றப்படவில்லை.
    ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி அளிக்கும்போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அந்த ஆலையின் நிர்வாகம் சரியாக நிறைவேற்றியிருக்கிறதா என்று பார்க்காதது மட்டுமின்றி அவர்கள் கேட்டபோதெல்லாம் நிபந்தனைகளைத் தளர்த்தி ஆலை நிர்வாகத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உதவியிருக்கிறார்கள்.
    ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி 250 மீட்டர் அகலத்திற்கு மரங்களாலான பசுமைப் போர்வை அமைக்கப்படவேண்டும் என்ற நிபந்தனை எந்தவித நியாயமுமின்றி 25 மீட்டராக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் குறைக்கப்பட்டுள்ளது. அதையும்கூட ஆலை நிர்வாகம் பின்பற்றுகிறதா என்று அந்த வாரியத்தின் அதிகாரிகள் மேற்பார்வை செய்யவில்லை.
    ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் மாசு மற்றும் கழிவுகள் எப்படி கையாளப்படுகின்றன என்பதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் முறையாகக் கண்காணிக்கவில்லை. அதனால், ஆலைக்குள் ஜிப்சம் உள்ளிட்ட ஏராளமான திடக்கழிவுகள் சேர்ந்து நிலத்தடி நீரைக் கடுமையாகப் பாதிக்கும் நிலை ஏற்பட்டது.


    ஸ்டெர்லைட்படத்தின் காப்புரிமைREUTERS

    உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கு நடந்தபோது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் யாவும் அவர்களால் நிறைவுசெய்யப்பட்டுவிட்டதாகச் சான்றளித்தது. அந்த நிபந்தனைகள் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தால் தொடர்ந்து நிறைவேற்றப்படுகிறதா என்று மாசு கட்டுப்பாட்டுவாரியம் கண்காணிக்கவில்லை.
    ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழக்கு ஏற்படுத்திய பாதிப்பை ஈடுசெய்வதற்காக 100 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
    "தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் அந்தத் தொகையை டெபாசிட் செய்து அதிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் மண் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தோடு ஆலோசனை மேற்கொண்டு தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை செயலாளரின் ஒப்புதலோடு நடவடிக்கை எடுக்கவேண்டும்,; ஒருவேளை வட்டித் தொகை போதவில்லையெனில் முதல் தொகையான 100 கோடியில் ஒரு பகுதியை சுற்றுச்சூழல் துறையின் செயலாளரின் அனுமதியோடு பயன்படுத்திக்கொள்ளலாம்" என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
    உச்சநீதிமன்ற உத்தரவின்படி 2013ஆம் ஆண்டே ஸ்டெர்லைட் நிர்வாகத்தால் 100 கோடி ரூபாய் தூத்துக்குடியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஃஆப் இந்தியா கிளையில் மாவட்ட ஆட்சியரின் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அதற்கு சுமார் 40 கோடி ரூபாய்க்குமேல் வட்டி சேர்ந்துள்ளது. இந்த வட்டித் தொகையை உச்சநீதிமன்ற ஆணையின்படி அப்பகுதி மக்களின் சுகாதார வசதிகளுக்காகவோ சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காகவோ மாவட்ட ஆட்சியர் பயன்படுத்தவில்லை.
    வட்டித் தொகையில் சுமார் இரண்டு கோடி ரூபாய் மட்டுமே இதுவரை மாவட்ட ஆட்சியரால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதுவும்கூட சுற்றுச்சூழல் மேம்பாடு சம்பந்தப்பட்ட பணிகளுக்கு அல்ல. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் 27 லட்ச ரூபாய் செலவில் பூங்கா அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அந்த நிதியைப் பயன்படுத்தியுள்ளார்.
    அதற்கு சுற்றுச்சூழல் துறையின் செயலாளர் ஒப்புதல் அளித்தாரா அல்லது அவரது ஒப்புதல் பெறாமலேயே மாவட்ட ஆட்சியர் அந்தத் தொகையை செலவு செய்தாரா என்று தெரியவில்லை. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு மாறாக தடுப்பணைகள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், சுற்றுச் சுவர்கள் முதலானவற்றை அமைப்பதற்கு சுமார் ஒன்றரை கோடி ரூபாயை மாவட்ட ஆட்சியர் செலவிட்டிருக்கிறார். மாவட்ட ஆட்சியர் செய்திருப்பது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகும்.
    ஆட்சியாளர்களின் தவறு
    ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு மிகவும் கேடுவிளைப்பது என்பதால்தான் குஜராத் மாநிலத்தில் அதை ஆரம்பிப்பதற்கு அனுமதிக்கவில்லை. கோவாவிலும் அனுமதி வழங்கப்படவில்லை. மகாராஷ்டிர மாநிலத்தில் ரத்தினகிரி என்கிற இடத்தில் இந்த ஆலையைக் கட்டுவதற்கு முதலில் அனுமதி வழங்கப்பட்டது.
    200 கோடி ரூபாய் செலவில் கட்டுமானப் பணிகளும் நடந்தன. ஆனால், அங்கு இந்த ஆலைக்கு எதிராக நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்களின் காரணமாக மகாராஷ்டிர அரசு அனுமதியை ரத்துசெய்தது. அதன்பிறகே தமிழ்நாட்டிற்கு இந்த ஆலை வந்தது. செல்வி ஜெயலலிதா முதன்முறையாக முதலமைச்சராக இருந்தபோதுதான் இந்த ஆலைக்கு தமிழ்நாட்டில் அனுமதி வழங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. தொழிற்துறையில் மிகப்பெரிய சாதனையாக அதை அன்று அவர் வர்ணித்து பெருமைபட்டுக்கொண்டார்.


    ஸ்டெர்லைட்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

    ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து வழக்கு நடந்த நேரத்திலும் அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களால் அதன் உரிமம் புதுப்பிக்கப்பட்டதுமட்டுமின்றி, சிப்காட் தொழிற்பூங்காவில் அந்த ஆலையின் விரிவாக்கத்துக்கு 342.22 ஏக்கர் நிலமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவையெல்லாமே ஆட்சியில் இருந்தவர்கள் செய்த தவறுகளாகும். தமிழ்நாட்டை ஆண்டவர்கள் மட்டுமின்றி மத்தியில் ஆட்சி செய்தவர்களும் ஸ்டெர்லைட்டுக்கு அவ்வப்போது உதவி செய்துள்ளனர்.
    ஸ்டெர்லைட்டை எதிர்த்து மக்கள் போராடுகிற நேரங்களிலெல்லாம் இந்த கட்சி அந்த கட்சியைக் குற்றம் சாட்டுவதும், அவர்கள் இவர்கள்மீது பழிபோடுவதும்தான் நடைமுறையாக இருந்து வருகிறது. அந்த நிலை 13 உயிர்கள் பறிக்கப்பட்ட இந்த நேரத்திலும்கூட மாறவில்லை.
    நீதித்துறையின் தவறு
    இந்த நாட்டின் உச்சபட்ச நீதிஅமைப்பாக உச்ச நீதிமன்றம் விளங்குகிறது. ஒருவர் உச்சநீதிமன்றத்தில் தவறான தகவலைக் கொடுத்து தனக்கு சாதகமான தீர்ப்பைப் பெற முயற்சித்தால் அது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படவேண்டும், கடுமையான தண்டனை விதிக்கப்படவேண்டும்.
    ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடையாணை பெற்ற ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் அங்கு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் பொய்யான தகவல்களைக் கொடுத்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எல்லாவித சட்டரீதியான அனுமதிகளையும் பெற்றே ஆலை இயங்கிவருவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அனுமதி அந்த ஆலைக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை.
    உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெறுவதற்கு மனுசெய்தபோது ஆலை இயங்கிக்கெண்டிருப்பதாக சொல்லப்பட்டிருந்தது. ஆனால், அந்த நேரத்தில் ஆலை உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடவில்லை, மூடப்பட்டிருந்தது. இந்தப் பொய்யான விவரத்தின் அடிப்படையிலேயே சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
    பொய்யான விவரங்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தி தடை உத்தரவு பெற்றதற்கு ஆலை நிர்வாகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரமே சான்றாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வழக்கு தொடுத்த 'நேஷனல் ட்ரஸ்ட் ஃபார் க்ளீன் என்விரான்மெண்ட்' என்ற அமைப்புக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் இந்தத் தவறுகளையெல்லாம் சுட்டிக்காட்டி அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 136ன் கீழ் உச்சநீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படவேண்டும் என வாதிட்டார்.


    ஸ்டெர்லைட்

    " ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உண்மைகளை மறைத்துள்ளது என்பதிலும், தவறான தகவல்களைத் தந்துள்ளது என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் அந்த ஆலையை மூடத்தான் வேண்டியிருக்கும்" எனக் குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், அந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் தாமிரத்தின் பயன்பாடு, அதில் வேலைசெய்யும் ஊழியர்களின் எண்ணிக்கை, அந்த ஆலையால் மத்திய மாநில அரசுகளுக்குக் கிடைக்கும் வரி வருவாய் ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் செய்த தவறின்மீது நடவடிக்கை எடுக்காமல் விடுவதாகவும் அவர்களின் மேல்முறையீட்டை ஏற்பதாகவும் கூறியது.
    ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளிப்படும் கழிவுகளால் சுற்றுப்புற கிராமங்களில் காற்று, நீர் முதலானவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாசு அதனால் வரும் சுகாதாரக்கேடுகள் ஆகியவை குறித்த விரிவான தகவல்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோதிலும் மக்களின் உயிருக்கும் சுகதாரத்திற்கும் ஏற்படும் பாதிப்புகளை பொருட்படுத்தாமல் உச்ச நீதிமன்றம் ஆலை இயங்குவதற்கு அனுமதியளித்தது.
    "இந்தத் தீர்ப்பின்மூலம் நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தள்ளுபடி செய்கிறோம். சுற்றுச்சூழலைக் காப்பதற்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த ஆலையை மூடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை சட்டப்படி எடுப்பதற்கு இந்தத் தீர்ப்பு குறுக்கே நிற்காது" என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பின் இறுதியில் குறிப்பிட்டிருந்தாலும் அந்தத் தீர்ப்பு ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட வழிசெய்தது என்பதே உண்மை.


    ஸ்டெர்லைட்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

    தவறுகளின்மீது படியும் தவறு
    ஸ்டெர்லைட் ஆலை விஷயத்தில் ஆட்சியாளர்கள், நிர்வாகத்துறை, நீதித்துறை மூன்றுமே சுற்றுச்சூழலுக்கும், மக்களின் உயிருக்கும் முக்கியத்துவம் அளிக்காமல் ஆலையின் நலன் குறித்து மட்டுமே கவலைப்பட்டுள்ளன. இந்த மூன்று தூண்களும் சனாநயாகத்தைத் தாங்கிப்பிடிப்பதற்கு மாறாக வேதாந்தா என்னும் கார்ப்பரேட் நிறுவனத்தைப் பாதுகாப்பதிலேயே ஆர்வமாக இருந்துள்ளன. ஒரு அமைப்பு செய்யும் தவறை இன்னொரு அமைப்பு தடுத்து நிறுத்தவோ திருத்தவோ முயற்சிக்கவில்லை.
    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களும், இப்போது தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளும் ஒரு உண்மையைத் தெளிவுபடுத்தியுள்ளன: நவ தாராளமயக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் இந்தச் சூழலில் தமது நிலத்தையும் நீரையும் உயிரையும் காப்பாற்றிக்கொள்ள மக்கள் தமது போராட்டங்களைத் தவிர வேறு எதையும் நம்பமுடியாது என்பதே அது.

    இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

    அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

     ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

    போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

     ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

    ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

     ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...