SHYAM NEWS
31.10.2018
அரசு பணத்தை வீண் அடித்துவிட்டு ஆட்சியர் மீது பழி போடும் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் !
பொதுமக்கள் கேள்விக்கு பதில் சொல்லமுடியாது பதில் சொல்லக்கூடாதுனு ஆணை இருக்கிறது என்றும் இது எங்கள் அலுவலக சட்டம் என்று அதிரடியாக பதில் அளித்த தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் மரியா ஜோசப் ரூஸ்வெல்ட் .
அரசு அலுவலக நிர்வாகம் வெளிப்படையாக இருக்கவேண்டும் என்பது பொதுவான விதி . ஆனால் எந்த விதி இருந்து நமக்கு என்ன என்று விதிகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு நமது பாக்கட்டில் பணம் நிரம்புகிறதா என்ற வேலையை மட்டும் செய்கிறார் மீறி யாராவது கேட்டால் மாவட்ட ஆட்சி தலைவர் மேல் பழியை போட்டு தான் தப்பித்து கொள்ளலாம் என்று பல தவறான வேலைகளை செய்து வருகிறார் . 2015 ல் அப்போதய மாவட்ட ஆட்சி தலைவர் வெள்ள பகுதில் பாதிக்க பட்ட இடத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டிய ஒதுக்கிய பசுமை வீட்டை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தெய்வநாயகம் தனது அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அதிகாரிகளுடன் சேர்ந்து வரும் தேர்தலில் தனக்கு ஓட்டு வேணும் என்பதற்காக அரசு அலுவலர் காலாங்கரை சேர்ந்த ஜெயபால் என்பவருக்கு உள்ளுரில் கொடுத்தால் தெரிந்து விடும் என கருதி சுப்பராமணியபுரம் என்ற ஊரில் அவருக்கு ஒதுக்கி கொடுத்து உள்ளார் .மற்றும் 2011.2012 ல் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் வீடு கட்டாமலே பில்கள் எடுக்கப்பட்டுள்ளது மற்றும் பஞ்சாயத்து தலைவர் மீது 6,37,000 க்கு மேல் கையாடல் செய்ததாக நீதி மன்ற உத்தரவும் உள்ளது .அரசு ஊழியருக்கு பசுமை வீடு கட்டி கொடுத்த பணத்தை திரும்ப பெற்று அரசு கஜானாவில் சேர்க்கவேண்டும் 2011-2012 வீடு காட்டாமல் பணம் எடுத்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அதற்க்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் வழக்கு பதிய வேண்டும் மற்றும் முன்னாள் பஞ்சாயத்தை தலைவர் தெய்வநாயகம் கையாடல் செய்த பஞ்சாயத்து பணத்தை வசூல் செய்யவும் தொடர்ந்து மானு அளிக்க பட்டு வந்த நிலையில் .இவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வட்டார வளர்ச்சி அதிகாரி பாண்டிய ராஜனும் மேலாளர் மரியா ஜோசப் ரூஸ்வெல்ட்ம் இருந்து வந்தனர் .இந்த நிலையில் இது தொடர்பான சநதேகங்களை மேலாளரை மரியா ஜோசப் ரூஸ்வெல்ட்ம் கேட்டபோது
பொதுமக்கள் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமுடியாது சொல்லக்கூடாது என்று அரசு ஆணை உள்ளது . எங்களுக்கு என்று (வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு )தனி சட்டம் உள்ளது என்றும் கூறிவருகிறார் .மற்றும் குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியர் ஜெயபாலும் மேலாளர் மரியா ஜோசப் ரூஸ்வெல்ட்ம் அரசு பணியில் இருவரும் சேரும் போதில் இருந்து நெருங்கிய நண்பர்கள் ஆதலால் மரியா ஜோசப் ரூஸ்வெல்ட் இல்லாமல் வேறு ஒரு நேர்மையான அதிகாரி வைத்து விசாரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து மனு அளித்து வருகிறோம் .மக்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்கி கொண்டு மக்களுக்கு பனி செய்யாமல் தவறுகளை முடி மறைக்க பணமும் பெற்று கொண்டு இருக்கின்றனர் .ஆனால் பழியை மட்டும் ஆட்சியர்கள் மீதும் அரசியல் வாதிகள் மீதும் போட்டு விட்டு இவர்கள் சுக வழக்கை வாழ்கிறார்கள் இவர்கள் மீது மாவட்ட ஆட்சி தலைவர் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கொட்டுகொண்டனர் .