தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் உப்பள தொழிலாளர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது.
தூத்துக்குடி ராஜபாண்டி நகரில் உள்ள ஸ்காட் நிறுவன அலுவலக வளாகத்தில் உப்பள தொழிலாளர்களுடன் ஆட்சி தலைவர் செந்தில்ராஜ் கலந்துரையாடல் நடத்தினார். அந்தக் கலந்துரையாடலில் பெண் தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் பல உப்பளங்களில் அடிப்படை வசதிகளான நல்ல குடிநீர் மற்றும் மற்றும் கழிப்பிட வசதி செய்து தர உப்பள முதலாளிகளிடம் வலியுறுத்த வேண்டுமென்றும் உப்பளத்தில் பணிபுரியும் போது உப்பில் சூரிய ஒளி எதிரொளித்து கண்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் உப்பு நீரில் தொடர்ந்து பணிபுரிவதால் கால் கைகள் தோல் நோயால் சேதம் அடைந்து வருவதாகவும் அதற்காக மருத்துவ முகாம் இப் பகுதியில் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். தொழிலாளர்கள் அடையாள அட்டை, ஆதார் இணைப்பு போன்ற முகாம்கள் தங்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும் ,தங்கள் குழந்தைகள் நீண்ட தூரம் சென்று அங்கன்வாடியில் படிக்க செல்வது கடினமாக உள்ளது ஆகவே எங்கள் பகுதியில் அங்கன்வாடி கட்டி தர வேண்டும் , 350 க்கு மேற்பட்ட குடும்ப அட்டை உள்ளதால் ரேஷன் கடை ஒன்று இப்பகுதியில் கட்டி தர வேண்டும் என்றும் பல கோரிக்கைகளை வைத்தனர். இதனைக் கேட்டுக் கொண்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ வரும் 7,8 தேதிகளில் மருத்துவ முகாம் நடைபெற ஏற்பாடு செய்து தருவதாகவும் நடமாடும் ரேஷன் கடை உடனடியாக ஏற்பாடு செய்த தருவதாகவும் மற்றும் மற்ற கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றி தருவதாகவும் வாக்குறுதி அளித்தார் அதனைத் தொடர்ந்து அங்குள்ள உப்பளம் பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார் அப்போது செய்திகளிடம் கூறுகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான அளவில் உப்பளங்களில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது இதில் 50 ஆயிரத்திறக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகின்றனர் அவர்களுக்கு தேவையான அடிபடை வசதிகள் மற்றும் அவர்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். உடன் தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் சமூக ஆர்வலர் கிட்டு ஆகியோர் உடன் இருந்தனர்.