மாவீரர் சுந்தரலிங்கனாருக்கு முழு உருவ வெண்கல சிலை வைக்க வேண்டும். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா சட்டமன்றத்தில் கோரிக்கை!
ஷ்யாம் நீயூஸ்
13.01.2023
மாவீரர் சுந்தரலிங்கனாருக்கு முழு உருவ வெண்கல சிலை வைக்க வேண்டும். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா சட்டமன்றத்தில் கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய ஊராட்சியில் உள்ள கவர்னகிரி ஊராட்சியில் வீரன் சுந்தரலிங்க நகரில் சுதந்திர போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபம் அமைந்துள்ளது அந்த மணிமண்டபத்தில் வீரன் சுந்தரலிங்கனாருக்கு மார்பளவு கற்சிலை உள்ளது அதனை முழு உருவ வெண்கல சிலையாகவும் நூலகமும் அமைத்து தரும்படி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கைக்கு செய்தி துறை அமைச்சர் சுவாமிநாதன் பதிலளிக்கையில் இடத்தை நேரடியாக பார்த்து நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்