எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு தினமும் ஐந்து நபருக்கு உணவளிக்கும் திட்டத்தை எம்ஜிஆர் அண்ணா திமுக கட்சி சார்பாக தொடங்கி வைக்கப்பட்டது.
ஷ்யாம் நீயூஸ்
17.01.2023
எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு தினமும் ஐந்து நபருக்கு உணவளிக்கும் திட்டத்தை எம்ஜிஆர் அண்ணா திமுக கட்சி சார்பாக தொடங்கி வைக்கப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு எம்ஜிஆர் ரசிகர்களும் எம்ஜிஆர் அண்ணா திமுக நிறுவனருமான ரவிவர்மா தலைமையில் இன்று முதல் தினமும் 17.01.203 முதல் 17.01.2024)வரை 5 நபர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளனர். உணவு வழங்கும் திட்டத்தை தூத்துக்குடி ரஜினி மன்ற தலைவர் விஜய் ஆனந்த் தொடங்கி வைத்தார்.எம்ஜிஆர் தன்னை காண வரும் நபர்களுக்கு தினமும் உணவளிப்பது அது ஒரு பழக்கமாக வைத்திருந்தார் அதனைப் போன்று தினமும் பசியானவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் இத்திட்டத்தில் தூத்துக்குடியை சார்ந்த நபர்கள் பயன் அடைய விரும்புவோர் இந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு டோக்கன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (9751119076,9790444908,9942610616,944495888. மேலும் த்துக்குடியில் கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் கூறுகையில்
எங்களைப் பொறுத்தவரை புரட்சித்தலைவர் இன்னும் எங்களோடு வாழ்ந்து வருகிறார். என்பதாலே உயிரோடு இருக்கும் மனிதர்களுக்கு அணிவிப்பது போலையே புரட்சித் தலைவர் சிலைக்கு மாலை அணிவித்துள்ளோம் என்று எம்ஜிஆர் அண்ணா திமுக கட்சியின் நிறுவனத் தலைவர் ரவிவர்மா கூறினார் மாவட்ட செயலாளர் சொர்ணமுருகன் உடனிருந்தார்.