ஷ்யாம் நீயூஸ்
02.01.2022
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கதவில்லாத கழிவறைகள் நோயாளிகள் அவதி!தூத்துக்குடி அரசு மருத்துவமணையில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் தங்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்க்காக உள்ள கழிவறைகளில் கதவுகள் இல்லாமல் உள்ளதால் நோயாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு உதவிக்கு இருக்கும் உறவினர்களும் மிகுந்த சிறமத்திற்க்கு உள்ளாகியுள்ளனர்.தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள நரம்பியல் நோய் உள்பிரிவில் ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு என பிரிக்கபட்டு ஒரே வார்டில் நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வார்டில் உள்ள கழிவறையில்
கதவுகள் இல்லாமல் உள்ளன.மற்றும் கதவு உள்ள கழிவறையில்,குளியல் அறையில் உள் தாழ்பா இல்லாமல் உள்ளன.இதனால் பெண் உள்நோயாளிகள், துணைக்கு இருக்கும் உறவினர்கள் கழிவறை மற்றும் குளியல் அறையை அச்சத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். இதனை தூத்துக்குடி சுகாதார அதிகாரிகள் சரி செய்து தரும்படி நோயாளிகள், பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.