தூத்துக்குடியில் ஆளுநர் ஆர்என் ரவியை எதிர்த்து சமத்துவ மக்கள் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
ஷ்யாம் நீயூஸ்
10.01.2023
தூத்துக்குடியில் ஆளுநர் ஆர்என் ரவியை எதிர்த்து சமத்துவ மக்கள் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
காமராஜர் பெயரை புறக்கணித்த ஆளுநர் ஆர்என் ரவியை எதிர்த்து சமத்துவ மக்கள் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கடந்த 7ம் நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் போது உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர் என் ரவி காமராஜர் பெரியார் அண்ணா அம்பேத்கர் போன்ற தலைவர்களின் பெயரை உச்சரிக்காமல் புறக்கணித்தார் இதனை கண்டித்து சமத்துவ மக்கள் கழகம் சார்பாக வருகின்ற 12 .1 .2023 அன்று வியாழக்கிழமை நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர் சமத்துவ மக்கள் கழகம் மாநில தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆணைப்படி தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு காலை 10 மணிக்கு கட்சி மாநில துணைச் செயலாளர் ரெ. காமராசு மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை ஆகியோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக சமத்துவ மக்கள் கழகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.