முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குற்றால வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை காப்பாற்றிய தூத்துக்குடி இளஞ்சரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார் ஆட்சியர்.

 ஷ்யாம் நீயூஸ் 31.12.2022 குற்றால வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை காப்பாற்றிய தூத்துக்குடி இளஞ்சரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார் ஆட்சியர்.  குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெறுக்கில் அங்கு குளித்து கொண்டிருந்த குழந்தையை வெள்ளநீர் இழுத்துச்  சென்றது. ஆபத்தில் சிக்கி குழந்தையை தன் உயிர் பாராமல் மின்னல் வேகத்தில் காப்பாற்றி தூத்துக்குடி இளஞ்சரை தூத்துக்குடி ஆட்சியர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் விஜயகுமார் இவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் கடந்த 29 12 2022 அன்று சுற்றுலா பயணிகளை அழைத்துக் கொண்டு தனது காரில் குற்றாலம் சென்றுள்ளார். பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குளித்துக் கொண்டு இருந்த குழந்தை ஒன்றை வெள்ளநீர் இழுத்துச் சென்றுள்ளது பொதுமக்கள் குழந்தை குழந்தை என கத்தவே சத்தம் கேட்டு அங்கு சென்ற விஜயகுமார் குழந்தை ஆபத்தில் சிக்கி உள்ளதை கண்டு தன்னுயிர் பாராமல் வெள்ளத்தில் இறங்கி குழந்தையை மின்னல் வேகத்தில் காப்பாற்றினார். குழந்தையை காப்பாற்றிய விஜயகுமாருக்கு அங்கு உள்ள சுற்றுலா பயணிகள் பாராட்டினர். குழந்தை க...

தூத்துக்குடி ஊராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம மக்கள் ஆட்சியருக்கு மனு!

 ஷ்யாம் நீயூஸ் 26.12.2022 தூத்துக்குடி ஊராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம மக்கள் ஆட்சியருக்கு மனு! தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் காலான் கரை கிராமத்தில் சமுதாய நலக்கூடத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் உதவியுடன் கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வ பிரபா அதிசயராஜ் மற்றும் அவரது கணவர் அதிசயராஜுடன் இடித்து கட்டிடத்தில் உள்ள கதவு ஜன்னல் பொருட்களை விற்றதோடு அதில் உள்ள செங்கல் ஜல்லி மணல் ஆகியவற்றை பஞ்சாயத்து தலைவரின் ஊரான பெரியநாயகிபுரத்தில் உள்ள  தனது காலி மனை பள்ளமாக உள்ள இடத்தில் நிரப்புவதற்கு எடுத்துச் சென்றுள்ளார். இதனால் கிராம மக்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது ஒரு வாரம் நடைபெற்ற இந்த பரபரப்பு போராட்டத்திற்கு பின் இன்று காலான்கரை கிராம மக்கள் சார்பாக சமுதாய நலக்கூடத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜன்,  கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வ பிரபா அதிசயராஜ் அவரது கணவர் அதிசயராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம...

மத உணர்வை மதிக்கிறோம்! மத வெறியை எதிர்க்கிறோம் தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

ஷ்யாம் நீயூஸ் 25.12.2022  மத உணர்வை மதிக்கிறோம்! மத வெறியை எதிர்க்கிறோம் தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.    தூத்துக்குடி பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி இரண்டாம் கேட் போஸ்திடல், பிரையண்ட்நகர், ஆகிய இரு இடங்களில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்      போராசிரியருக்கு புகழ் சேர்க்கும் வகையில் 7500 கோடி திட்டத்தில் தமிழக பள்ளிகள் பாராமரிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளது. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஒன்றை ஆண்டு காலத்தில் 70 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. டிஎன்பிஎஸ்இ தேர்வு மூலம் தமிழில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு வேலை என்ற சட்டத்தை கொண்டு வந்து தமிழர்களின் நலனை பாதுகாத்தது திமுக அரசு வடமாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு வேலை கிடைப்பதால் இந்த சட்டத்தை அமுல் படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளோம் பள்ளி கல்லூரியில் படிக்கும் போது திறன் மேம்ப...

கபடி போட்டியில் காயமுற்ற கபடி வீரருக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் ஆறுதல் கூறினார்

 ஷ்யாம் நீயூஸ் 25.12.2022 கபடி போட்டியில் காயமுற்ற கபடி வீரருக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் ஆறுதல் கூறினார் தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி அருகே சவேரியார்புரம் பகுதியில் கபடி குழு இருந்து வருகிறது. தமிழகத்தில் பல இடங்களில் நடைபெறும் போட்டிகளில் இந்த கபடி குழுவினர் பங்குபெற்று பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளனர்.  இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த கபடி வீரர் ஜென்சன் கபடி போட்டியொன்றில் விளையாடும் போது எதிர்பாராத வகையில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தற்போது அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். தகவல் அறிந்த மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவருமான தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் கபடி வீரர் ஜென்சன் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வில்சன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்க மாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்த குமார், கௌதம் மற்றும் சவேரியார்புரம் ஊர் இளைஞரணியினர், கபடி வீரர்கள் உடன் இருந்தனர்.

தூத்துக்குடியில் 30 லட்சம் மதிப்புள்ள கட்டிடத்தை காணவில்லை! கண்டுபிடித்து தர பொது மக்கள் கோரிக்கை!

 ஷ்யாம் நீயூஸ் 23.12.2022 தூத்துக்குடியில் 30 லட்சம் மதிப்புள்ள கட்டிடத்தை காணவில்லை! கண்டுபிடித்து தர பொது மக்கள் கோரிக்கை! தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோரம்பள்ளம் ஊராட்சி சார்ந்த கிராமம் காலான்கரை. தனி கிராம்மாக பட்டியலின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மறுத்து வருகிறார் பஞ்சாயத்து தலைவர் செல்வ பிரபா அதிசயகுமார். .இக்கிராமத்திற்கு அடிப்படை உரிமைகளில் ஒன்றான சுகாதாரமான குடிநீர் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது பாரதப் பிரதமரின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் ஒப்பந்ததாரர்கள் மூலம் குழாய் பதிக்கும் பணியை தீவிரமாக செயல்படுத்திய பஞ்சாயத்து தலைவர் இதுவரை குடிநீர் வழங்காமல் குளத்து நீரையும் உப்பு நீரையும் கலந்து கொடுத்து வருகிறார் இதனால் அக்கிராம மக்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி நோய்கள் ஏற்படுகின்றன .அதே கோரம்பள்ளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சில  கிராமங்களுக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கி வருகிறார். தனி பட்டியலின மக்கள் வாழ்ந்துவரும் காலா...

சசிகலா புஷ்பா மீது தூத்துக்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு!

 ஷ்யாம் நீயூஸ் 23.12.2022 சசிகலா புஷ்பா மீது தூத்துக்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு! தூத்துக்குடியில்  தெற்கு மாவட்ட பாஜக சிறுபான்மையினர் அணியின் சார்பாக  நேற்று முன்தினம் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது அந்த விழாவில் அமைச்சர் கீதாஜீவனை மிரட்டும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பற்றி பேசினால் வீட்டு வாசலில் காலை வெட்டுவோம் நாக்கை அறுப்பேன் என பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா பேசி பரபரப்பு ஏற்படுத்தினார் இது தொடர்பாக திமுக மாணவர் அணி வழக்கறிஞர் பிரிவு மாவட்ட  செயலாளர் சீனிவாசன் என்பவர் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சசிகலா புஷ்பா மீது 504, 505(2), 506 (1) ஆகிய 3 பிரிவுகளின் சப் இன்ஸ்பெக்டர் சிவராஜா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். கலவரத்தை தூண்டுவது போன்று சசிகலா புஷ்பா பேசியது தூத்துக்குடியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தெரியாத கோரம்பள்ளம் ஊராட்சி செயலர் பொதுமக்கள் அவதி!

 ஷ்யாம் நீயூஸ் 21.12.2022 கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தெரியாத கோரம்பள்ளம் ஊராட்சி செயலர் பொதுமக்கள் அவதி! தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கோரம்பள்ளம் ஊராட்சி செயல் அலுவலராக பணிபுரிபவர் சீனிவாசன் இவருக்கு கம்ப்யூட்டர் என்பது என்னவென்றே தெரியாமல் அதை பயன்படுத்த தெரியாமலும் அலுவலகத்தில் இருந்து பொழுதை கழித்து வருகிறார். கோரம்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் வரி செலுத்த வரும்போது கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தெரியாததால் பாதி நேரம் வாடகைக்கு ஆள் பிடித்து கம்ப்யூட்டர் பில் போடுவதும் கம்ப்யூட்டருக்கு பில் போட ஆள் கிடைக்காத பட்சத்தில் பல நேரங்களில் பொதுமக்களை அழைக்களிப்பதும் ஆக இருந்து வருகிறார். வீட்டு வரி செலுத்த வரும் பொது மக்களை குடிநீர் வழியை செலுத்தினால் மட்டுமே வீட்டு வரி போட்டு தரப்படும் என்று கட்டாயப்படுத்துகிறார் குடிநீர் கட்டணம் செலுத்தினால் தான் வீட்டு வரி பதியப்படும் என்று எந்த சட்ட விதியும் இருப்பதாக தெரியவில்லை மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாத வீடுகளுக்கு எந்த விதமான முன்னுரிப்பு தகவல்களும் அனுப்பப்படாமல் இருக்கும் பட்சத்தில் பொதுமக்களிடம் அடாவடித்தனமாக ப...

பொதுமக்களை ஒருமையில் பேசிய தூத்துக்குடி பி டி ஓ. சமுதாயக்கூடம் இடிக்கும் வேலையில் கூட்டுக் கொள்ளை அம்பலம்!

 ஷ்யாம் நீயூஸ் 19.12.2022 பொதுமக்களை ஒருமையில் பேசிய தூத்துக்குடி பி டி ஓ. சமுதாயக்கூடம் இடிக்கும் வேலையில் கூட்டுக் கொள்ளை அம்பலம்! தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு உட்பட்ட கோரம்பள்ளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் காலான் கரை  .இங்கு 2003 2005 ஆம் ஆண்டு அதிமுக எம்எல்ஏ ராஜம்மாள் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சமுதாய நலக்கூடம்  கட்டித் தரப்பட்டது .அந்த சமுதாய கூடம் கட்டி 20 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் தற்போதைய பஞ்சாயத்து தலைவர் செல்வ பிரபா கட்டிடத்தை பராமரிப்பு பணி செய்யாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன்பு பஞ்சாயத்தால் கட்டிடத்தை இடிக்க  தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.  சமுதாய கூடத்தை இடிப்பதற்கான ஒப்பந்தங்கள் போடப்படாத நிலையில் கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வ பிரபாவின் கணவர்அதிசயராஜ் கட்டிடத்தை இடித்து  பல லட்சம் மதிப்புள்ள கட்டிடத்தில் உள்ள இரும்பு கதவுகள் ஜன்னல்கள் டி எம் டி கம்பிகள் போன்றவற்றை தன்னிச்சையாக எடுத்து விற்று விட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வட்டார வளர்ச்ச...

மக்கள் நலன் தான் முக்கியம் முதலமைச்சர் கரத்தை வலுப்படுத்த வேண்டும். மாப்பிள்ளையூரணி ஊராட்;சி மன்ற தலைவர் சரவணக்குமார் உருக்கமான பேச்சு

ஷ்யாம் நீயூஸ் 12.12.2022  மக்கள் நலன் தான் முக்கியம் முதலமைச்சர் கரத்தை வலுப்படுத்த வேண்டும். மாப்பிள்ளையூரணி ஊராட்;சி மன்ற தலைவர் சரவணக்குமார் உருக்கமான பேச்சு தூத்துக்குடி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் சார்பில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் ஊராட்;சி மகேஸ்வரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் பேசுகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை படி நடைபெறுகின்ற இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கணக்கெடுக்கும் பணியை துவக்குவது இதற்கு அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் தங்களது பகுதிகளில் கண்கெடுக்கும் பணியாளர்களுக்கு முழு ஓத்துழைப்பு வழங்க வேண்டும். தூத்துக்குடி மாவட...

தூத்துக்குடி ரஜினி ரசிகர்கள் ரத்த தானம் வழங்கினர்

ஷ்யாம் நீயூஸ் 12.12.2022 தூத்துக்குடி ரஜினி ரசிகர்கள் ரத்த தானம் வழங்கினர் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி ரசிகர்கள் ரத்த தானம் வழங்கினர். வரும் 18ஆம் தேதி கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடத்த உள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை இன்று ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் தூத்துக்குடி ஒருங்கிணைந்த ரஜினிகாந்த் கிளை மன்றங்கள் சார்பாக ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி அரசு  மருத்துவமனையில் ரசிகர்கள் ரத்ததானம் வழங்கினர்.நிகழ்ச்சியில் ராமமூர்த்தி, பழனிமுருகன், N. முருகன், ராமசாமி சிவசூரியன்,வள்ளிநாயகம், லிங்ககுமார், தனபால், காந்தி, ராஜ், கண்ணன், சந்தனம், மூர்த்தி, ரஜினி முருகன், ஆண்டவர் ஆகியோர் கலந்து கொண்டனர்

ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் பதட்டம்

ஷ்யாம் நீயூஸ் 12.12.2022  ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் பதட்டம்! ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கூட்டமைப்புகள் அருணா ஜெகதீசன் அறிக்கை அடிப்படையில் தாசில்தார் காவல்துறைனர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு கொடுக்க உள்ளதால் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் தன்னெழுச்சியாக கிளர்ந்து போராட்டம் நடத்தினர் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற நூறாவது நாள் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் அதனைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உத்தரவிட்டது மற்றும் துப்பாக்கி சூடு நடந்ததற்கான காரணத்தை அறிவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. தூத்துக்குடியில் இவ்வாறு பதட்டம் நடத்தும் கொண்டிருக்கும் நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம்  ஏஜென்சிகளை வைத்து பணம் கொடுத்து கூலிக்கு ஆட்களை அழைத்து  ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஆட்சியரிடம் ஸ்டெர்லைட் ஆலையை...

புதுக்கோட்டையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

 ஷ்யாம் நீயூஸ் 10.12.2022 புதுக்கோட்டையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார். தூத்துக்குடி புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்களை வழங்கும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். மகளிர் திட்ட இயக்குநர் வீரபத்திரன் வரவேற்புரையாற்றினார்.  தெற்குமாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்களை வழங்கினார்.  சுகாதார விழாவில் சண்முகையா எம்.எல்.ஏ, இணை இயக்குநர் பொற்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜ், நாகராஜ்,  முன்னாள் மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் ஊராட்சி ஓன்றிய குழு தலைவரும் கூட்டுறவு வங்கி தலைவருமான விபிஆர் சுரேஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அம்பாசங்கர், பாலமுருகன், அனஸ், சுதாகர், ஜோதிராஜா, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம்,  தலைமை செயற்குழு ...

எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதிலடி உடனே கொடுக்க வேண்டும் செயற்குழு கூட்டத்தில் கீதாஜீவன் பேச்சு

ஷ்யாம் நீயூஸ் 10.12.2022  எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதிலடி உடனே கொடுக்க வேண்டும் செயற்குழு கூட்டத்தில் கீதாஜீவன் பேச்சு    தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.      கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் அதிக அளவில் இளைஞர்கள் புதிய உறுப்பினர்கள் மகளிர்கள் சேர்க்க வேண்டும் ஒவ்வொரு பகுதியிலும் வளர்ச்சிக்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். நமக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்பவர்களை பற்றிய தகவல்களை உடனுக்குடன் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் எனக்கு தெரிவிக்க வேண்டும் அதற்கு தகுந்தாற்போல் அந்த பகுதியில் நாம் கூட்டம் போட்டு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். புதியவர்களையும் இணைத்து அவர்களையும் அரவணைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் பணியாற்ற வேண்டும். எதிர்வரும் தேர்தலில் முழு...

தூத்துக்குடியில் வரும் 10ம் தேதி சனிக்கிழமை பல்துறை இலவச சிறப்பு மருத்துவ முகாம் - கனிமொழி எம்பி துவங்கி வைக்கிறார்

ஷ்யாம் நீயூஸ் 07.12.2022  தூத்துக்குடியில் வரும் 10ம் தேதி சனிக்கிழமை பல்துறை இலவச சிறப்பு மருத்துவ முகாம் - கனிமொழி எம்பி துவங்கி வைக்கிறார் இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ குழுமம் சென்னை வடபழனி போர்டிஸ் மருத்துவமனை நடத்தும் பல்துறை இலவச சிறப்பு மருத்துவ முகாம் வரும் 10ம் தேதி சனிக்கிழமை தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.  சிறப்பு மருத்துவ முகாமில்  போர்டிஸ் மருத்துவமனை இயக்குனர் வெங்கட பணிதர் நெல்லூரி வரவேற்புரையாற்றுகிறார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.  மருத்துவ முகாமை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமை வகித்து துவக்கி வைக்கிறார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சிவக்குமார், சுகாதார துறை துணை  இயக்குநர்கள் பொற்செல்வன், பாஸ்கோ ராஜா உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த மருத்துவர்கள் தொழ...

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது

ஷ்யாம் நீயூஸ் 05.12.2022 தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் பணியாளர்களை நிரப்புவதற்கு எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது தேர்விற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாகவும் வேலை வாய்ப்பு அலுவலகம் கடிதம் மூலமாகவும் 7958 விண்ணப்பங்கள் வரப்பட்டன இதில் 6029 நபர்கள் தேர்வு எழுதினர் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 18 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. தூத்துக்குடி தாலுகாவில் மூன்று தேர்வு மையங்களில் 1525 நபர்களில் 1133 நபர்கள் எழுத்து தேர்வு எழுதினர். தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வு மையத்தில் தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார் ஆய்வு செய்தார் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 15 16 தேதிகளில் நேர்காணல் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு 19 12 22 அன்று நியமன ஆணை வழங்கப்படும் என வட்டாட்சியர்  தெரிவித்தார்.

தூத்துக்குடியில் 10 கோடி மதிப்புள்ள சுடலைமாட சுவாமி கோவில் இருக்கும் நிலம் யாருக்கு? பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு?

 ஷ்யாம் நீயூஸ் 01.12.2022 தூத்துக்குடியில் 10 கோடி மதிப்புள்ள சுடலைமாட சுவாமி கோவில் இருக்கும் நிலம் யாருக்கு? பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரியநாயகிபுரம் கோரம்பள்ளம் சுற்று வட்டார 18 கிராமத்தை சேர்ந்த பட்டியலின மக்கள் நூற்றாண்டுகளுக்கும் மேலாக வழிபட்டு வரும் சுடலைமாட சுவாமி கோவில் தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடு சாலையில் அருகில் உள்ளது. இக்கோயில் இருக்கும் 52 சென்ட் இடம் தற்போது சந்தை மதிப்பில் 10கோடிக்கு மேல் உள்ளது என தெரிகிறது. சுடலைமாடசுவாமி கோயில் இருக்கும் கோரம்பள்ளம் சர்வே எண் 26/3B புதிய எண் 26/3B1A நிலம் 60 சென்ட் தனக்கு பாத்தியப்பட்டது என்று கோரம்பள்ளத்தைச் சார்ந்த G.K தேவராஜ் என்பவர் 1993 தூத்துக்குடி நீதிமன்றத்தில் விளிம்புகை வழக்கு தொடர்ந்தார் வழக்கை விசாரித்த நீதிமன்றம்  G.K.தேவராஜ் தாக்கல் செய்த விளிபுகை வழக்கை 11 2 1998ல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கு தள்ளுபடி ஆனதை மறைத்து G.K தேவராஜ் அந்த நிலத்தை விற்பதற்கு முயற்சித்து வருவதாக ஊர் பொதுமக்களுக்கு தெரியவந்துள்ளது இதனால் அன்றைய பிரபல ந...