SHYAM NEWS
06.05.2020
விவசாயிகள் இலவசமாகக் களிமண், வண்டல்மண் பெறலாம்'- தமிழக அரசு அறிவிப்பு!
நீர் நிலைகளில் உள்ள களிமண், வண்டல் மண், சவுடு, சரளை மண்ணை விவசாயிகள் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் நீர்நிலைகளில் உள்ள மண்ணை மட்பாண்டம் செய்வோரும் இலவசமாகப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் கிராமத்திலோ, அருகில் உள்ள கிராமத்திலோ இலவசமாக மண்ணைப் பெறலாம் என்றும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் தவிர பிற மாவட்டங்களில் இலவசமாக மண் பெறலாம். மற்ற மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று மணலை எடுக்கலாம் என்று அரசு கூறியுள்ளது.