தட்டுப்பாடு இல்லாத தண்ணீர் சேவையில் ஜம்புலிங்கபுரம் ஊராட்சி! முன்னேற்ற பாதையில் கிராம பஞ்சாயத்து பொதுமக்கள் பாராட்டு !
ஷ்யாம் நியூஸ்
20.05.2020
தட்டுப்பாடு இல்லாத தண்ணீர் சேவையில் ஜம்புலிங்கபுரம் ஊராட்சி!
முன்னேற்ற பாதையில் கிராம பஞ்சாயத்து பொதுமக்கள் பாராட்டு !
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் ஜம்புலிங்கபுரம் ஊராட்சி ஓன்று .
இந்த கிராம பஞ்சாயத்தில் தலைவராக பொறுப்பேற்றுஇருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி சின்னத்துரை பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்வதில் அதிரடி காட்டிவருகிறார் .
சுகாதாரம் , சாலை சீரமைப்பு ,தெருவிளக்கு ,சீரான குடிநீர் விநியோகம் என மின்னல்வேகத்தில் பணிகளை நிறைவேற்றி வருகிறார் .இந்த வகையில் புதுப்பச்சேரி , மேலபாண்டியபுரம் கிராமங்களுக்கு நீர் ஏற்றும் நிலையத்தில் ஏற்பட்ட பழுதை 24 மணி நேரத்தில் சரி செய்து மக்களுக்கு குடிநீர் கிடைப்பதை உறுதி செய்தார் இப்பணியின் பொது உதவியாளர் சின்ன முனியசாமி ,ஊராட்சி மன்ற உறுப்பினர் முருகன் மற்றும் கிராம முக்கிஸ்தர்கள் சக்திவேல் ஆகியோர் இருந்தனர் . இரவு பகல் பாராமல் மக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் தன்னிகர் இல்லாத ஜம்புலிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி சின்னத்துரைக்கும் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர் .