மின் விளக்குகளால் மிளிரும் ஜம்புலிங்கபுரம் ஊராட்சி பகுதி !பஞ்சயாத்து தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு !
ஷ்யாம் நியூஸ்
04..05.2020
மின் விளக்குகளால் மிளிரும் ஜம்புலிங்கபுரம் ஊராட்சி !பஞ்சயாத்து தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு !
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது ஜம்புலிங்கபுரம் ஊராட்சி .இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஜம்புலிங்கபுரம் ,ஜம்புலிங்கபுரம் காலனி ,மேல வீரபாண்டியபுரம் ,புதுப்பேச்சேரி ,புதுப்பேச்சேரி காலனி,எஸ் புதூர் கிராம பகுதிகளில் தெருவிளக்குகள் ,மின்கம்பங்கள் போன்றவை பழுதடைந்து பொதுமக்கள் அடிப்படை வசதியான மின்சாரம் சரிவர கிடைக்காமல் இருந்தனர் .கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஜம்புலிங்கபுரம் பஞ்சாயத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற செல்வராணி சின்னதுரை மக்களின் அடிப்படை உரிமையை பூர்த்தி செய்யும் விதமாக பஞ்சாயத்துக்கு உட்பட்ட அணைத்து பகுதிகளிலும் பழுதான மின் விளக்குகளை நீக்கிவிட்டு புது விளக்குகள் பொருத்தி ஒளிரவிட்டார் .நீண்டநாட்களுக்கு பிறகு பஞ்சாயத்தின் அணைத்து கிராம பகுதிகளிலும் இரவு நேரத்தில் மின் விளக்கு எரிவதால் விஷப்பூச்சிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்றும் திருட்டு பயம் இல்லாமல் இருக்கலாம் என்றும் தங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றி தந்த பஞ்சயாத்து தலைவர் செல்வராணி சின்னதுரைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர் .