கோடை வெயில் தாகம் தணிக்க ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில் ஆட்சியரிடம் வழங்கியது தூத்துக்குடி ராஜரத்தினம் அறக்கட்டளை !
கோடை வெயில் தாகம் தணிக்க ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்களை ஆட்சியரிடம் வழங்கியது
தூத்துக்குடி ராஜரத்தினம் அறக்கட்டளை !
தூத்துக்குடியில் அடையல் ராஜரத்தினம் அறக்கட்டளை சார்பில் ஒரு லிட்டர் அளவு உள்ள ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில் தூத்துக்குடி ஆட்சியரிடம் வழங்கினார்
அறக்கட்டளை தலைவர் ஸ்டீபன் செந்தமிழ்பண்டியன்.
கொரானா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறந்துள்ளது இதனால் மக்கள் வெளியில் வராமல் நோய்பரவலை தடுக்க வீட்டில் தனிமை படுத்தி வாழ்ந்து வருகின்றனர்.மற்றும் அரசு ஊழியர்கள், காவல்துறை பணியாளர்கள்ண் சுகாதாரஊழியர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள்,மின்சார ஊழியர்கள் என அனைவரும் கொரானா தடுப்பு பணியில் ஓய்வின்றி பணிபுரிந்து வருகின்றனர்.தற்போது கோடை காலம் என்பதால் வெப்பம் அதிகமாக இருப்பதை மனதில் கொண்டு கொரானா தடுப்பு பணியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும்பொதுமக்கள்
பத்திரிகையாளர்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் ஒரு லிட்டர் அளவு உள்ள ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்களை அடையல் ராஜரத்தினம் அவர்களின் பேரன் லீனிஸ் நாடார்
பிறந்த நாளை முன்னிட்டு அறக்கட்டளை தலைவர் ஸ்டீபன் செந்தமிழ்பண்டியன்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரி விடம் வழங்கினார் அறக்கட்டளை தலைவர் ஸ்டீபன் செந்தமிழ்பண்டியன். கொரானாவால்
பாதிக்கப்பட்ட உப்பள தொழிலாளர்கள்,மாற்று திறனாளிகள், ஆதரவற்றவர்கள் போன்றோர்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்து சமுக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள் வினிஸ்டன்.சோலைராஜ் செல்வகுமார் கணேசன் முரளி முத்துகிருஷ்ணன் மாரியப்பன் துரைப்பாண்டி ஆகிய நிர்வாகிகள் கலந்துகொண்டு குடிநீர் பாட்டில்களை வழங்கினார்கள்.