ஷ்யாம் நியூஸ்
21.05.2020
தூத்துக்குடியில் நடுரோட்டில் ஓடும் சாக்கடை! மாநகராட்சி நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை!
தூத்துக்குடி சுப்பையா முதலியார்புரம் 4வது தெருவில் நடுரோட்டில் சாக்கடை ஆறாக ஓடுகிறது. கொரானா அச்சம் இப்போதுதான் குறைய ஆரம்பித்து உள்ளது.மக்கள் ஊரடங்கை முழுமையாக முடித்துவிட்டு தங்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வெளியில் வருகின்றனர். தூத்துக்குடி சுப்பையா முதலியார்புரம் 4வது தெரு மணப்புரம் பைனான்ஸ் நிறுவனம் முன்பு கழிவு நீர் தொட்டி நிறைந்து சாக்கடை நீர் நடுரோட்டில் ஓடுகிறது 10 நாட்களுக்கு மேலாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. வீடு வீடாக வந்து கொசு உற்பத்தியாகும் நோய்வரும் என்று குளிர்சாதனப் பெட்டி அண்டா குண்டாவை திறந்து பார்க்கும் ஊழியர்களுக்கு நடுத்தெருவில் ஓடும் சாக்கடை தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.அந்த தெருவில் பொதுமக்கள் நடந்து செல்வதால் நோய்வரும் என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.ஆகவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள்கேட்டுக்கொண்டார்.