ஷ்யாம் நியூஸ்
26.05.2020
கொரானா நாற்பது புத்தம் வெளியீட்டு விழா!துத்துக்குடி டி எஸ் பி பிரகாஷ் தொடங்கி வைத்தார்!
தூத்துக்குடி சென்சேவியர்ஸ் பள்ளி தமிழ் பேராசிரியரும் எழுத்தாளருமான நெய்தல் யூ அன்டோ எழுதிய கொரானா நாற்பது என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
விழாவில் தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் புத்தகத்தை வெளியிட்டார் முதல் பிரதியை அடையல் ராஜரத்தினம் நாடார் அறக்கட்டளை தலைவர் ஸ்டீபன் செந்தமிழ்பண்டியன் பெற்றுக்கொண்டார்.இந்நூல் தமிழகத்தில் கொரானாவை மையமாக வைத்து வெளிவரும் முதல் நூல் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந் நூலின் ஆசிரியர் நெய்தல் யூ அன்டோ கூறுகையில்; உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் தவிர்த்து, இத்தொற்றை குறித்த விழுப்புணர்வு, மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, எதிர்ப்பு சக்தி நிறைந்த நம் பாரம்பரிய உணவுமுறை பற்றிய விளக்கங்களும் கொரோனா நாற்பது நூலில் விவரித்துள்ளதாகவும், மக்கள் இதை படித்து பாதுகாப்பான ஆரோக்கிய வாழ்வை வாழ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மணவை ரூஸ்வெல்ட் முன்னிலை வகித்தார் இவ்விழாவில் மரியதாஸ், பெனின், வில்பர்ட், இளஞ்சர் இயக்கம் பெனோ ,தாமஸ் போன்றோர் கலந்துகொண்டுடனர் .தூத்துக்குடி பிரஸ் அன்ட் மீடியா பெடரெசன் தலைவர் அ.பிரான்சிஸ் நிகழ்ச்சிய ஏற்ப்பாடு செய்திருந்தார்.