தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர் .ஸ்டெர்லைட் விவகாரகத்தில் அரசு இரட்டைவேடம் போடுவதாக சி பி ம் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் குற்றச்சாட்டு !
ஷ்யாம் நியூஸ்
22.05.2020
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர் .ஸ்டெர்லைட் விவகாரகத்தில் அரசு இரட்டைவேடம் போடுவதாக சி பி எம் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் குற்றச்சாட்டு !
தூத்துக்குடியில் கடந்த 2018 மே 22 ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஏராளமான பொதுமக்கள் ஆட்சியரிடம் மனுகொடுக்க சென்றனர் .அப்போது ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர் அதில் பொதுமக்கள் 15 நபர்கள் கொல்லப்பட்டனர் . இதன் எதிரொலியாக ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது தமிழக அரசு . துப்பாக்கி சூடு நடந்த மே 22 ஐ தூத்துக்குடி பொதுமக்கள் துக்கத்தினமாக அனுசரித்து வருகின்றனர் .இதனால் வன்முறை எதுவும் நடந்து விடக்கூடாது என்பாதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்க பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது .
இன்று தூத்துக்குடி சி பி ம் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் தலைமையில் துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்த 15 நபர்களுக்கும் மெழுகுப்பத்தி ஏற்றி இரண்டாம் ஆண்டு வீரவணக்கம் செலுத்தினர் .பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் ஸ்டெர்லைட்ஆலை விவகாரத்தில் தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து ஆலையை நிரந்தரமாக மூடாமல் இரட்டை வேடம் போடுகிறது படுகொலை செய்த காவலர்கள் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கொலைவழக்கு பதிவு செய்யவேண்டும் எனவும் ஸ்டெர்லைட் ஆலையிடம் கொரானா நிதியாக 5 கோடிரூபாய் அமைச்சர் கடம்பூர் ராஜு வாங்கி உள்ளார் இது கண்டிக்க தக்கது என்றும் ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார் .இதில் மாநகர செயலாளர் ராஜா ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து ,ரசல் ,மாவட்டக்குழு முத்து ,பூமயில் ,புறநகர் செயலாளர் ராஜா ,ஒன்றிய செயலாளர் சங்கரன் மாணவர் சங்கம் ஜாய்சன் மற்றும் பல உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .
http://youtu.be/r1puos3ymv4