தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருமாதத்திற்கான உணவு பொருட்களை வழங்கியது அடையல் ராஜரத்தினம் அறக்கட்டளை !
SHYAM NEWS
14.05.2020
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கான உணவு பொருட்களை வழங்கியது அடையல் ராஜரத்தினம் அறக்கட்டளை !
தூத்துக்குடி ராஜரத்தினம் பேரன் லீனிஸ் நாடார்அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அடையல் ராஜரத்தினம் அறக்கட்டளை சார்பாக 50 மாற்று திறனாளிகள் குடுமபத்திற்கு ஒரு மாதத்திற்கும் மேலாக பயன்படுத்தும் அரிசி ,காய்கறிகள் ,மசால்பொருட்கள் ,சமையல் எண்ணெய் ,கோதுமை மாவு மற்றும் பல பொருட்களை அறக்கட்டளை நிர்வாகி ஸ்டீபன் செந்தமிழ் தூத்துக்குடி லூசியா இல்ல பங்கு தந்தையிடம் வழங்கினார் . கொரோனோ வைரஸ் காரணமாக ஊரடங்கில் வேலை இல்லாமல் தவிக்கும் ஏழை மக்களுக்கு ராஜரத்தினம் அறக்கட்டளை உணவு பொருட்கள் வழங்கி வருகிறது அதுபோல் தூத்துக்குடி லூசியா இல்லத்திற்கும் 50 குடும்பத்திற்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கிய ராஜரத்தினம் அறக்கட்டளை நிர்வாகி ஸ்டீபன் செந்தமிழ்க்கு பங்கு தந்தை நன்றி தெரிவித்தார் .இந்த நிகழ்ச்சியில் சோலைராஜ் செல்வகுமார் கணேசன் முரளி முத்துகிருஷ்ணன் மாரியப்பன் துரைப்பாண்டி ஆகிய நிர்வாகிகளும் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.