முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடியில் 3000 கள்ள குடிநீர் இணைப்பு!துண்டிக்க ஆணையர் நடவடிக்கை!

ஷ்யாம் நியூஸ் 29.07.2019 தூத்துக்குடியில் 3000 கள்ள குடிநீர் இணைப்பு-துண்டிக்க தூத்துக்குடி ஆணையர் உத்தரவு! தூத்துக்குடியில் வரலாறு காணாத குடிநீர் பற்றாக்குறை ஏற்ப்பட்டுள்ளது.இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் அனுமதி இல்லாமல் 3000 க்கும் அதிகமான குடிநீர் இணைப்புகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டள்ளது. அதை துண்டிக்கும் வேலை நடந்து வருவதாகவும் முறைகேடான இணைப்பு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தூத்துக்குடி மாநகராட்சி ஆனையர் தெரிவித்தார்.மற்றும் இன்னமும் 18 மாதங்களில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க மீட்டர் பொருத்தப்பட்டும்.அதில் ஆயிரம் லிட்டர் இலவசம் அதற்க்கு அதிகமாக பயண்படுத்தும் குடிநீர்க்கு கட்டணம் வசூலிக்கப்படும். மாநகராட்சி பகுதிகளில் 450 கி.மீ அளவக்கு புதிய சாலைகள் அமைக்க 250 கோடி நிதி கேட்டக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

தூத்துக்குடியில் உள்ள உலக பிரசித்தி பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

SHYAM NEWS 26.07.2019 தூத்துக்குடியில் உள்ள உலக பிரசித்தி பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் உலக பிரசித்திபெற்றதாகும். இந்த ஆலயத்தில் ஜுலை 26 முதல் ஆக.5ம் தேதி வரை நடைெறும் திருவிழா சாதி, மத பாகுபாடு இன்றி அனைவரும் கொண்டாடப்படும். நடண்பாண்டில் 437வது ஆண்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 6 மணிக்கு 2வது திருப்பலியும் நடந்தது. 7.30 மணிக்கு ஆயர் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. பின்னர் ஆலயத்தில் வைக்கப்பட்டு இருந்த கொடி பேண்டு வாத்தியங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து கொடிமரத்துக்கு கொண்டு வரப்பட்டு பிரார்த்தனைகள் நடந்தன. தொடர்ந்து ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் ஆயர் ஸ்டீபன் கொடியை ஏற்றி வைத்தார்.  அப்போது மக்கள் மகிழ்ச்சி பொங்க ஆரவாரத்துடன் புறாக்களை பறக்க விட்டனர். மேலும் மக்கள் நேர்ச்சையாக கொண்டு வந்த பால், வாழைப்பழம் ஆகியவற்றை கொடிமரத்தின் அடியில் வைத்து வணங்கினர். சிலர் சிறு குழந்தைகளையும் கொடி ம...

நெல்லை முன்னால் மேயர் பெண் படுகொலை:ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம்!

ஷ்யாம் நியூஸ் 24.07.2019 நெல்லை முன்னால் மேயர் பெண் படு கொலை : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம்! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. நெல்லை மாவட்டம். ரெட்டியார் பட்டியை சேர்ந்த உமா மகேஸ்வரி 1996 ஆண்டு தி மு க சார்பில் நெல்லை மாநகராட்சியில் முதல் பெண் மேயராக இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது . இந்த நிலையில் இவர் ரெட்டியார் பட்டியில் வசித்து வந்த நிலையில் இன்று மாலை 6 மணியளவில் வீடு புகுந்து உமா மகேஸ்வரி அவரது கணவர். பணிப்பெண் உள்ளிட்ட மூன்று பேரையும் கொடூரமாக வெட்டி படு கொலை செய்த சமூக விரோதிகளை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மிகவும் வண்மையாக கண்டிக்கிறது. அமைதி பூங்காவாக உள்ள  தமிழகத்தில் தொடர்ச்சியாக படு கொலைகள் நடந்த வண்ணமாக உள்ளது இது போண்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க தமிழக அரசு சிறப்பு கவணம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது. உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூன்று பேரையும் இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் ஆ...

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.

SHYAM NEWS 23.07.2019 தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது. இது தொடர்பாக பேராலய அதிபர் மற்றும் பங்குத்தந்தை குமார் ராஜா இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், உலக பிரசித்திபெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் 437-வது ஆண்டு திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வருகிற 25ம் தேதி மாலை கொடி பவனி நடைபெறுகிறது.  ஜூலை 26-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் கொடியேற்றி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார். அன்று காலை 7.30  ஆயர் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து 8.30மணிக்கு கொடியேற்றமும் நடைபெறும். அன்று மதியம் 12 மணிக்கு அன்னைக்கு முதன்மை குரு ரோலிங்டன் தலைமையி்ல் பொன் மகுடம் சூட்டப்படுகிறது.  6ம் நாள் திருவிழாவான ஜூலை 28ம் தேதி  (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு ஆயர் தலைமையில் புதுநன்மை, கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6.15 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. ஆகஸ்ட் 4-ம் தேதி (சனிக்கிழமை) இரவு 7மணிக்கு ஆயர் பெருவிழா மால...

தூத்துக்குடியில் வருகிற 25ம் தேதி துடிசியா சார்பில் வாங்குவோர் விற்போர் சந்திப்பு (BUYER SELLER MEET) நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

  SHYAM NEWS 23.07.2019 தூத்துக்குடியில் வருகிற 25ம் தேதி துடிசியா சார்பில் வாங்குவோர் விற்போர் சந்திப்பு (BUYER SELLER MEET)  நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  இது தொடர்பாக துடிசியா நேரு பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கமானது ஓர் பதிவு செய்யப்பட்ட, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். இந்த சங்கமானது 1991 முதல் சீரிய முறையில் செயல் பெற்று வருகிறது. இந்த சங்கத்தில் 450 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்து உறுப்பினராய் உள்ளனர். குறிப்பாக உப்பு உற்பத்தி, உணவு உற்பத்தி,கனரக தளவாட உற்பத்தி, அச்சுத் தொழில், இரசாயனம் சார்ந்த தொழில் நிறுவனங்கள் இதில் பதிவு செய்து உள்ளது.  "துடிசியா” என்னும் இந்த அமைப்பானது, தொழிற்துறைகளின் தேவைகள், கருத்துக்கள் மற்றும் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நமது மாவட்டத்தில் சிறு தொழில் வலுப்பெற உதவி புரிந்து கொண்டிருக்கிறது. மேலும் சென்னையில் உள்ள தொழில் முனைகள் மேம்பாட்டு மையத்துடன் இணைந்து நமது மாவட்டத்தில் புதிய தொழில...

தூத்துக்குடியில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை -போலீஸ் விசாரணை!

ஷ்யாம் நியூஸ்  22.07.2019 தூத்துக்குடி அருகே திமுக நிர்வாகி வெட்டி படுகாெலை : போலீஸ் விசாரணை தூத்துக்குடி அருகே திமுக நிர்வாகி வெட்டி படுகாெலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. குலையன்கரிசலை சேர்ந்தவர் வேல்சாமி மகன் கருணாகரன் (55). இவர் தூத்துக்குடி யூனியனில் முன்னாள் சேர்மனாக இருந்தவர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர். தற்போது திமுகவில் பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் அங்குள்ள தோட்டத்திலிருந்து கருணாகரன் வெளியே வரும் போது ஒரு மர்மகும்பல் திடீரென அவரை வழிமறித்து வெட்டியது. இதில் அவர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் புதுக்கோட்டை போலீசார் இறந்தவர் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தூத்துக்குடி எஸ்பி., அருண் பாலகோபாலன், ரூரல் டிஎஸ்பி முத்தமிழ் ஆகியோர் விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்விரோத்தினால் ...

தூத்துக்குடி மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு முகாம். மாற்று திறனாளிகளின் நம்பிகை நாயகன்ஆட்சியர் சந்தீப் நந்தூரி அழைப்பு !

தூத்துக்குடி மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் விடுபட்ட குழந்தைகளை இணைத்து கொள்ள அழைப்பு -ஆட்சியர் சந்தீப் நந்தூரி ! தூத்துக்குடியில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதற்கு ஆகஸ்ட் 8 ம் தேதி வரை சிறப்பு முகாம்  நடைப்பெறும் மாற்று திறனாளிகள்  இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார் . தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் மாற்று திறனாளிகளின் வளர்ச்சிக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்துவருகிறார் .அனைத்து திங்கள் கிழமைகளிலும் முதல் வேலையாக மாற்று திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே வந்து மனுக்களை வாங்கி அதை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி  நடவடிக்கை எடுப்பது மாற்று திறனாளிகளுக்கு டீ கடைகள் அமைத்து கொடுப்பது .மாற்று திறனாளிகளுக்கு உதவியாக வாகனம் வழங்குதல் போன்ற எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை சுறுசுறுப்பாக செய்துவருவதாளும் மாற்று திறனாளிகளின் மனுக்கள் அதி வேகத்தில் பரிசீலனை செய்யப்படுவதாலும்  தூத்துக்குடி மாவட்ட மாற்று திறனாளிகளின் நம்பிகை நாயகனாக திகழ்ந...

துறைமுகம் தனியார் மயமாக்கள் முயற்சியை கைவிடவேண்டும் !தூத்துக்குடியில் HMS சங்கம் கோரிக்கை!

துறைமுகங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடவேண்டும் !தூத்துக்குடியில் H M S சங்க ஊழியர்கள் கோரிக்கை ! இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்களில்  சுமார் 45000 ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது .ஆனால்  அரசு அந்த பணியிடங்களை நிரப்பாமல் 55 வயதுக்கு மேல் உள்ள ஊழியர்களை கட்டாய ஓய்வு கொடுத்து வருகின்றனர் .இது சம்பந்தமாக 2019 க்கு முன் பாராளுமன்ற குழுவிடம் அகில இந்திய துறைமுக ஊழியர் மற்றும் டக் மற்றும் மெரைன் ஊழியர்களின் நலன்கருதி அறிக்கை அளிக்கப்பட்டது ஆனால்  திருத்தப்பட்ட பாராளுமன்ற மசோதாவில் நாங்கள் அளித்த கோரிக்கைகள் இடம்பெறவில்லை . முக்கிய துறைமுகங்களை தனியார் மாயம்மாக்க அரசு முயற்சி செய்து வருகிறது .தனியார் மயமாக்களை விட்டு விட்டு அகில இந்திய துறைமுக ஊழியர் மற்றும் டக் மற்றும் மெரைன் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் இல்லை என்றால் வரும் ஆகஸ்ட் மதம் அகில இந்தியா துறைமுக ஊழியர்கள் மற்றும் டக் மெரைன் ஊழியர் சங்கம்  H M S போராட்டம் நடத்தும் என்றும் .தூத்துக்குடி வ உ சி  துறைமுகத்தில்  டக் மற்றும் மெரைனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப்படவேண...

வெற்றி பெற்றால் ரெட் லைட் ஏரியா உறுதி! -வேட்பாளர் செல்லப்பாண்டியன் வாக்குறுதி !

ஷ்யாம் நியூஸ் 19.07.2019 வெற்றி பெற்றால் ரெட் லைட் ஏரியா அமைத்து கொடுப்பேன் -வேட்பாளர் செல்லப்பாண்டியன் வாக்குறுதி ! வேலூரில் எம்பி தேர்தல் வரும் 5-ம் தேதி நடக்க போகிறது. இதற்கு அஇதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சிகள் களம் இறங்க உள்ளன. இதில் சில சுயேச்சைகளும் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவர் செல்லப்பாண்டியன் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளராக வேட்புமனுத்தாக்கள் செய்தார் .கழுத்தில் கொய்யாப்பழ மாலையுடைன் அந்த அவர் தான் வெற்றி பெற்றால் டாஸ்மாக் கடைகளில் தரமான சரக்கு கிடைக்க பாடுபடுவேன் சரக்கு அடிப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டால் நல்லது அதனால் கொய்யாப்பழ மாலையுடன் வந்தேன் என்றும்  மற்றும் ரெட் லைட் ஏரியா அமல்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார் . இதனால் தி மு க,  .அ .தி க ,காட்சிகள் ஒருவித பதட்டத்தில் உள்ளதாக தகவல் .

மனைவியை விட்டுவிட்டு கணவர் கள்ளகாதலியுடன் ஓட்டம்! தூத்துக்குடியில் பெண் பரபரப்பு புகார்!

 ஷ்யாம் நியூஸ் 16.07.2019 மனைவியை விட்டு கள்ளக்காதலியுடன் கணவர் ஓட்டம்! சுந்தரம் மீனாட்சி என்ற ஆர்த்தி ஆகிய எனக்கும் மணிகண்டனுக்கும் 15 9 2013 அன்று திருமணம் நடைபெற்றது நகை பணத்திற்காக ஆசைப்பட்டு என்னை திருமணம் செய்துகொண்டார் மணிகண்டன் இப்பொழுது நான்கு வயதில் மிருதன் என்ற ஆண்குழந்தை எங்களுக்கு உள்ளது அவர் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். அந்த நிறுவனத்தில் பணி புரியும் தாரா தேவியுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது தாரா தேவிக்கு திருமணமாகி 9 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது இந்த கள்ளக்காதலுக்காக அந்த ஒன்பது வயது பெண் குழந்தையை கொன்றுவிட்டு பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு நான்காவது நாளிலேயே வெளிநாட்டிற்குச் சென்று வந்துள்ளனர். வெளிநாட்டிலிருந்து வந்த பின்பு தாரா தேவி தனது கணவரை மிரட்டி விவாகரத்தை பெற்றுள்ளார் அதன் பின்பாக அவர்களுக்கு திருமணத்தை விஏஓ ஆகியவை ஏமாற்றி பதிவு திருமணத்தை செய்து வைத்துள்ளனர் அவர்களது குடும்பத்தார் அதன் பின்பாக அயர்லாந்து நாட்டில் இருந்து அந்த இறந்த பெண் குழந்தையின் புகைப்படத்தை பேஸ்புக் வாயிலாக எ...

புகழ் பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா கோவில் திருவிழாவிற்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன !D S P பிரகாஷ் அறிவிப்பு !

ஷ்யாம் நியூஸ் 17.07.2019 புகழ் பெற்ற தூத்துக்குடி  பனிமயமாதா   கோவில் திருவிழாவிற்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன !D S P பிரகாஷ் அறிவிப்பு ! தூத்துக்குடி புகழ் பெற்ற பனிமயமாதா  கோவில் திருவிழா வரும் 26.07.2019 முதல் 05.08.2019 வரை நடைபெற உள்ளது .இத் திருவிழா 26.07.2019 அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது இது தூத்துக்குடி மக்கள்  ஓன்று கூடி கொண்டாடும் திருவிழாவாகும் மற்றும் இலங்கை மலேசியா போன்ற வெளிநாட்டு பக்தர்களும் வந்து செல்வார்கள் .இந்த திருவிழாவில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக தூத்துக்குடி காவல்த்துறை 1000 க்கும் அதிகமான காவலர்கள் பணி  அமர்த்த படஉள்ளனர் .திருவிழாவிற்கு வந்து செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி பெற்றோர்களை தவறவிட்ட குழந்தைகளின் பெற்றோர்களை  எளிதில் கண்டறியும் வகையில் புதிய முயற்சியாக மாத  கோவில் வரும் அணைத்து குழந்தைகளின் கைகளிலும் பெற்றோர் விவரம் மற்றும் தொலைபேசி எண் அடங்கிய பேண்ட் காவல்த்துறை மூலம் அணிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .மற்றும் உயர் கோபுரங்கள் அமைத்து பைனாகுலர்...

தூத்துக்குடியில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி !தூத்துக்குடி S P அருண் பாலகோபாலன் IPS தொடங்கி வைக்கிரார் !

ஷ்யாம் நியூஸ் 15.07.2019 தூத்துக்குடியில்  அகில  இந்திய கூடைப்பந்து போட்டி !தூத்துக்குடி S P  அருண் பாலகோபாலன் IPS தொடங்கி வைக்கிரார் ! தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சுழற்கோப்பைக்காக  ARAISE STEEL நிறுவனத்தின் பேராதரவுடன் தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் நடத்தும் மாபெரும் 9வது தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சுழற்கோப்பைக்காக  ARAISE STEEL நிறுவனத்தின் பேராதரவுடன் தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் நடத்தும் மாபெரும் 9வது அகில  இந்திய அளவிலான கல்லூரி ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் மாபெரும் கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி ஜிம்கானா கிளப்பிலுள்ள V .N .M .A .D .ராமகிருஷ்ணன் B .E ,அவர்கள் நினைவு மின்னொளி மைதானத்தில் 17.07.2019 முதல் 21.07.2019 வரை நடைபெறவுள்ளது . இப்போட்டியை 17.07.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் I .P .S  அவர்கள் ஜிம்கானா கிளப்பின் தலைவர் V .V .D.பிரம்மானந்தம்  ஆகியோர் முன்னிலையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியினை தொடங்கி வைக்கிறார் . இக்கூட்டைபந்து போட்டியில் ஆடவர் ...

இலவச வீட்டுமனை பட்டா உடனடியாக வழங்கவேண்டும்.ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்தல்!

ஷ்யாம் நியூஸ் 11.07.2019 இலவச வீட்டு மணை பட்டா உடனடியாக வழங்குக : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்தல் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. தூத்துக்குடி மாவட்டம். காயல் பட்டிணத்தில் பதிணைந்து ஆண்டுக்கும் மேலாக ஏழை மக்கள் சொந்த வீடு  இல்லாமல் வாடகை  வீட்டில் வசித்து  வருகிறார்கள் விட்டின் உரிமையாளர்கள் ஒவ்வொரு ஆண்டுக்கும் வாடகை பணம் ஏற்றி வசிலிப்பதால் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் மிகவும் சிரமம் பட்டு  வாடகை கொடுத்து வருகிறார்கள் . ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் 2016 ஆம் ஆண்டு எனது தலைமையில் சுமார் 250 க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டு முன்னால்  மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் அவர்களிடம் காயல் பட்டிணத்தில் உள்ள ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மணை பட்டா வழங்க கோரி மனு கொடுக்க பட்டது. விரைந்து இலவச வீட்டு மனைபட்டா வழங்க கோரி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் காயல் பட்டிணத்தில் நடைபெற்றது . என்பது குறிப்பிடதக்கது. அம்மா வழியில் நல்லாட்சி தரும் மாண்புமிகு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் சிறப்பு கவனம் ...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

ஷ்யாம் நியூஸ் 11.07.2019 தூத்துக்குடி மாவட்டஆட்சியருடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு! தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கையாளர்களின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் சம்மந்தமாக, தூத்துக்குடி மாவட்டஆட்சியர் சந்தீப் நந்தூரியை, இன்று மாலை தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களின் சங்கத்தினர் சந்தித்து மனு அளித்தனர். தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தூத்துக்குடி மாநகர், மாவட்ட தலைவர் சக்தி.ஆர். முருகன், செயலாளர் கிம சங்கர்,பொருளாளர் ஞானதுரை, துணைதலைவர் சண்முகஆனந்தன், மூத்த பத்திரிகையாளர் குமாரவேல் ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி மாவட்டஆட்சியர் சந்தீப் நந்தூரியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவில், பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைக்க வேண்டும் , பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம், குடும்ப நல நிதி உள்ளிட்டவை பிற மாநிலங்களைப் போல குறிப்பாக ஆந்திர மாநிலத்தை போல தாலுகா பத்திரிக்கையாளர்கள் உள்பட அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் நலதிட்டங்களை வழங்க வேண்டும். பத்திரிக்கையாளர்களின் இறப்புக்கு பின்னர், ஓய்வூதியத்துக்கு பின்னால் அவர்களுக்கு கிடைக்கும் அரசு உதவி தொகை பெறுவதற்கான விதிமுறைகள் மிகவும் கட...

செக்காரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மடி கணினி வழங்கப்பட்டது.

Shyam News 10..07.2019 செக்காரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மடி கணினி  வழங்கப்பட்டது.   தூத்துக்குடி  செக்காரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மடி கணினி  வழங்கப்பட்டது. இதில் 2018-2019 ம் ஆண்டிற்கான மடி கணினி வழங்கப்பட்டது 11 ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு 39 மடி கணினியும் 12 ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு 36 மடி கணினியும் வழங்கப்பட்டது . விழாவில் கல்விக்குழு தலைவர் ஐ. ராமலெட்சுமி, பெற்றோர்கள் ஆசிரியர் கழக தலைவர் சுப்பையா, கல்வி குழு உறுப்பினர் காமராசு ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினர்.  விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ரெஜினா,  கணிப்பொறி ஆசிரியர் நம்பி ராஜன் ஆகியோர் செய்திருந்தனர்

தூத்துக்குடியில் பிங்க்சூப்பர் சேல்ஸ் கண்காடசி: ஆட்சியரின் மனைவி பங்கேற்பு!

ஷ்யாம் நியூஸ் 09.07.2019 தூத்துக்குடியில்   பிங்க்சூப்பர்   சேல் கண்காட்சி  :  மாவட்ட   ஆட்சியரின்   மனைவி பங்கேற்பு! தூத்துக்குடியில்   பிங்க்சூப்பர்   சேல் கண்காட்சி   நடைபெற்றது .  இதில் தூத்துக்குடி   மாவட்ட   ஆட்சியரின் மனைவி   பங்கேற்றார் . தூத்துக்குடி   டிஆர்   நாயுடு   தெருவில் கடந்த  86  ஆண்டுகளாக   லேடிஸ் ரெக்ரியேசன்   கிளப்   இயங்கி   வருகிறது .  அந்த   கிளப்   சார்பில்   சுயதொழில் செய்யும்   பெண்களை   ஊக்கப்படுத்தும் வகையில்   பிங்க்சூப்பர்   சேல்   கண்காட்சி விற்பனை   நடைபெற்றது .  இதில்  50  கும் மேற்ப்பட்ட   விற்பனை   ஸ்டால்கள் அமைக்கபட்டிருந்தது .  இந்த   விழாவை கிளப்பின்   மூத்த   உறுப்பினர்   சாந்தா செண்பகம் ,  சாவித்திரி   விஜயராஜன் ஆகியோர்   திறந்து   வைத்தனர் .  புதுப்பிக்கப்பட்ட   சிறுவர்   பூங்காவை அபிந...

தூத்துக்குடி 2ம் கேட் மேம்பால நில எடுப்புக்கு எதிர்ப்பு!

ஷ்யாம் நியூஸ் 04.07.2029 தூத்துக்குடி 2ம் கேட் மேம்பால நில எடுப்புக்கு எதிர்ப்பு! தூத்துக்குடி 2கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க நில எடுப்ப்பு தொடர்பான கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி மருத்துவர் வீரப்பன் தலைமை வகித்தார் சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன் உட்பட அரசு அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். வணிகர்கள் மற்றும் இந்து முன்னணி அமைப்பை சர்ந்தவர்கள் பொதுமக்கள் ஆச்சேபனை தெறிவித்தனர். தூத்துக்குடி சிவன்கோவிலில் நடைபெரும் சப்பரபவனி போன்ற நிகழ்ச்சிகள் பாதிக்கப்படும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பாதிக்கபடுவார்கள் எனவே இதுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மாற்றுவழி ஏற்படுத்தி பயண்படுத்தவேண்டும் தூத்துக்குடி இரயில் நிலையத்தை மீளவிட்டானுக்கு மாற்றுவது அணைத்து வகையிலும் சிறந்தது என தெறிவித்தனர். கூட்டத்தில் 2ம் கேட் வியாபாரி சங்க தலைவர் சிவமாரியப்பன் நகர மத்திய வியாபாரி சங்க தலைவர் பாஸ்கர் இந்து முன்னணி நம்பிராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

பேச மறுத்த தூத்துக்குடி மகாராணியை படுகொலை செய்தார் இளவரசன்.

ஷியாம் நியூஸ் 04.07.2019 பேச மறுத்த தூத்துக்குடி மகாராணியை படுகொலை செய்தார் இளவரசன்.  இளவரசனுடன் மகாராணி பேசவில்லையாம் அதனால்  கொலைசெய்தாராம் இளவரசன் இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்த தம்பதி நடேசன் - மகாராணி. நடேசன், கல்லாமொழியில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையத்தில் என்ஜினீயராக வேலை பார்க்கிறார். மகாராணிக்கு 28 வயதாகிறது. இவர்களுக்கு விம்ரித் என்ற 5 வயது மகன் உள்ளான். இந்த நிலையில் சம்பவத்தன்று(02.07.2019), நடேசன் வழக்கம்போல் வேலைக்கு போய்விட்டார்.மகனும் ஸ்கூலுக்கு போய்விட்டான். அப்போது, மகாராணியின் தந்தை உலகமுத்து மதியம் மகளை பார்க்க வீட்டுக்கு வந்தபோது, மகாராணி கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி உள்ளார். இதை கண்டு அலறிய உலகமுத்து, மகளை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்ல முயன்றார், ஆனால் வழியிலேயே உயிர் பிரிந்தது. மகாராணி  இது சம்பந்தமாக சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் மோப்ப நாயுடன் வந்து விசாரணை ஆரம்பித்தனர். வீட்டில் மகாராணி தனியா இருப்ப...

சட்டம் தெரியாத போலீசார்!ஒரு பார்வை !

ஷ்யாம் நியூஸ் 03.07.2019 சட்டம் தெரியாத போலீசார்!  ஒரு பார்வை ! பொது இடங்களில் புகை பிடிப்போர் மீது நடவடிக்கை எடுப்பதில் திருப்தியில்லை; அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதி, 'புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தவுடன், குற்றம் செய்தோர் மீது ஜாமினில் வெளிவரக்கூடிய சட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளீர்கள்.'சிறார் சட்டப் பிரிவு, 177ஐ ஏன் சேர்க்கவில்லை? அந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய, போலீசாருக்கு தெரியாதா? எப்.ஐ.ஆர்., போட தெரியாத போலீசார், ஓய்வுபெற்ற காவல் துறையினரை நியமித்து கொள்கின்றனர்.'சட்டம் தெரியாத போலீசாரால், எப்.ஐ.ஆர்., கூட ஒழுங்காக பதிவு செய்ய முடியவில்லை. போலீஸ் பயிற்சியில், 'டிப்ளமா இன் லா' அவசியம் படிக்க அரசுக்கு அறிவுறுத்துங்கள்' என, நீதிபதி உத்தரவிட்டார். அது போல, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, 16 வயது சிறுமி, 2014ல், நான்கு ப...