தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் முத்துநகர் பல்லுயிர் பூங்கா திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
ஷ்யாம் நீயூஸ் 31.05.2023 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் முத்துநகர் பல்லுயிர் பூங்கா திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சர்வதேச பல்லுயிர் பெருக்க தினத்தை முன்னிட்டு ஸ்டெர்லைட் ஆலை சார்பில், 32 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர் பெருக்கத்தை மீண்டும் உருவாக்குதல் என்ற சர்வதேச இலக்கை மெய்ப்பிக்கும் வகையில் முத்துநகர் பல்லுயிர் பூங்கா திட்டத்தை உருவாக்கி உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மீளவிட்டானில் நடைபெற்றது. விழாவுக்கு தமிழ் நாட்டின் காடுகளின் மனிதர் என்று அழைக்கப்படும் சரவணன் தலைமை வகித்தார். இவர் புதுச்சேரிக்கு அருகில் 100 ஏக்கர் தரிசு நிலத்தை காடுகளாக மாற்றி பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளின் சரணாலயமாக மாற்றியுள்ளார். இத்திட்டத்தை தொடங்கி வைத்து பேசும்போது, காடுகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். நிகழ்ச்சிக்கு தெற்கு சிலுக்கன்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பாலசுப்ரமணியன், சாமிநத்தம் பஞ்சாயத்தை சேர்ந்த நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தி...