ஷ்யாம் நியூஸ்
28.03.2021
பெண்களை இழிவாக பேசும் அதிமுக! தூத்துக்குடி கண்டன ஆர்பாட்டத்தில் அவல நிலை!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆ. ராஜாவை ஸ்பெக்ட்ரம் ஊழல் வாதி என்று முதல்வர் பழனிசாமி கூறியிருந்தார் அதற்க்கு பதில் கூறும் வகையில் முதல் அமைச்சரின் கோட்டையில் வந்து நிருபிக்கிறேன் முடிந்தால் உங்கள் அமைச்சர்களையும் சட்ட அறிவு இல்லாவிட்டால் அரசு தலைமை வழக்கறிஞர் களை பக்கத்தில் வைத்து கொள்ளுங்கள் நான் குற்றமற்றவன்
என்று நிறுபிக்கிறேன் என்று சவால் விட்டார் ஆ. ராசா. ஆனால் முதல்வர் அவர் சவாலை ஏற்று கோட்டைக்கு அழைக்கவில்லை. அன்று முதல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி க்கும் திமுக துணை போது செயலாளர் ஆ. ராசாவிற்க்கும் வார்த்தை போர் நடந்து வருகிறது. சமீபத்தில் ஆ. ராசா தேர்தல் பரப்புரையின் போது முதல்வர் பழனிசாமி தனது அரசியல் நுழைவவை எப்படி வந்தது என்பதை உவமையாக கூறியதை. அவரின் தாயைதை தவறாக பேசியதாக குற்றம் சாட்டி வந்தார். அதற்க்கு
ஆ. ராசா தான் பேசியதை அரைகுறையான விடியோவை வேட்டி ஒட்டி தவறான செய்தியை அதிமுகவினர் பரப்பி வருகின்றனர் என்று பதில் கூறியிருந்தார். அதன் எதிரொலியாக தூத்துக்குடி வி வி டி திடலில் அ தி மு. க மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஆ. ராசாவை கண்டிக்கிறோம் ராசாவை கண்டிக்காத ஸ்டாலினை கண்டிக்கின்றோம் என்றும் கண்ணகி வாழ்ந்த ஊரில் கனி மொழியும் வாழ்கிறாள் என்றும் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்பாட்டம் நடத்தும் அதிமுக மகளிர் அணியினர்க்கு முன்பு நின்று கொண்டு அதிமுக ஆண் நிர்வாகி கோஷமிடும் வாசகத்தை கூறிகொண்டியிருந்தார். அதில் ஒன்றுதான் கண்ணகி வாழ்ந்த ஊரில் கனிமொழியும் வாழ்கிறாள் என்ற கோஷம். கனிமொழியும் ஒரு பெண்தான் என்பதை மறந்து அதிமுக மகளிர் அணியினர் அந்த கோஷத்தை பிரதிபலித்தனர்.