சாதனைகளோடு சரித்திரம் படைக்க வேண்டும்! தூத்துக்குடி மருத்துவக்கல்லுரி முதல்வர் ரேவதி பாலன் மகளிர் தின வாழ்த்துக்கள் !
சாதனைகளோடு சரித்திரம் படைக்க வேண்டும்! தூத்துக்குடி மருத்துவக்கல்லுரி முதல்வர் ரேவதி பாலன் மகளிர் தின வாழ்த்துக்கள் !
மார்ச் -8, 1857 - அன்று முதல் உலகமெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் மாதம் 8 -ம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஆனால், அது வந்த வரலாற்றை சற்று பின்னோக்கி பார்ப்போம். வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும். இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான போராட்டத்திற்கான வெற்றிகள் அவ்வளவு எளிதாக கிட்டவில்லை. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்தான் இது.
சாதனைகளோடு சரித்திரம் படைக்க வேண்டும்! இன்று பெண்கள் இல்லாத துறைகள் என்று எதுவும் இல்லை பெண்கள் படைக்காத சாதனைகள் இல்லை இதில் மருத்துவத்துறையும் விதிவிலக்கில்லை கடந்த கொரானா காலத்தில் பெண்மருத்துவர்கள் செவிலியர்கள் தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஓன்று சேர்ந்து தங்களது குடும்ப பொறுப்புகளை சுமந்துகொண்டும் பணிக்காலங்களில் இரவு பகல் பாராமல் தங்களை தனிமை படுத்திகொண்டு கொரானா எனும் அரக்கனோடு போராடி நம் தூத்துக்குடி மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட பெண்மருத்துவர்களுக்கும் பெண்சுகாதார பணியாளர்கும் என் அன்பான மகளிர் தின நல்வாழ்த்துக்கள். சுகாதர பெண்பணியாளர்களுக்கு பாதுகாப்பும் தன்னம்பிக்கையும் வழங்கிய ஆட்சியர் அவர்களுக்கும் எங்களுக்கு உறுதுணையாக இருந்து சகோதர்களாக பணியாற்றிய மருத்துவர்களுக்கும் சுகாதார பணியாளருக்கும் எனுது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என தூத்துக்குடி அரசுமருத்துவமணை முதல்வர் ரேவதி பாலன் தெரிவித்தார்.