ஷ்யாம் நியூஸ்
09.03.2021
தூத்துக்குடியில் பரபரப்பு அதிமுகவை எதிர்த்து தேமுதிகவினர் கோஷம் !
அதிமுக தேமுதிக கூட்டணி முறிவை தொடர்ந்து கூட்டணியில் இருந்து விலகுவதாக பிரேமலதா விஜகாந்த் தெரிவித்தார் .வரும் தேர்தலில் அதிமுக வை எதிர்த்து களம் இறங்க போவதாக அறிவித்தார் ,இந்த அறிவிப்பினால் மகிழ்ச்சி அடைந்த தேமுதிக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர் .
தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் முன்பு தேமுதிக மாவட்ட துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினார் அதிமுகவை எதிர்த்து கோஷமிட்டனர் .நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராஜமுஹம்மது முன்னாள் ஒன்றிய செயலாளர் ஸ்டிபன் ராஜ் பகுதி செயலாளர்கள் சம்சுதீன் ,அரசமுத்து ,பொன்ராஜ் ,நாராயணமூர்த்தி ,வர்த்தக அணி குமார் ஸ்ரீவை மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் .