லஞ்சம் தராத டாஸ்மாக்கடைகளுக்கு டார்கட் ரைடு பயந்து நடுங்கும் உழியர்கள்! டாஸ்மாக் ஏஜடியூசி சங்கம் கடும் கண்டனம்!
ஷ்யாம் நீயூஸ்
21.03.2021
லஞ்சம் தராத டாஸ்மாக்கடைகளுக்கு டார்கட் ரைடு பயந்து நடுங்கும் உழியர்கள்! டாஸ்மாக் ஏஜடியூசி சங்கம் கடும் கண்டனம்!
தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் அரசு நிறுவனம் டாஸ்மாக் ஆகும் . ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்த கூலியே வழங்கி வருகிறது அரசு. மற்றும் சரக்குபெட்டிகளை இறக்கும் கூலி, மின்சார கட்டணம்,உடையும் பாட்டில், போன்றவைகளுக்கு ஆகும் செலவுகளை ஊழியர்களே பொறுப்பெற்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது . மற்றும் கடையின் விற்பனை தொகைக்கு ஏற்ப மாவட்ட மேலாளர், பறக்கும் படை, காலால் அதிகாரி,என பலருக்கும் கடைக்கு 5000 முதல் 10000வரை மாமூல் வசூல் செய்து கொடுக்க தூத்துக்குடி டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் சிலர் நியமிக்கபட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வோரு கடைக்கும் டார்கெட் நிர்ணயம் செய்து ஒவ்வோரு மாதமும் முதல் வாரத்தில் வசூலில் இறங்கிவிடுவார்ள். இவர்கள் டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மாமூல் பணத்தில் ஒரு பகுதியை இவர்களுக்கு எடுத்து கொண்டு மீதி வசூல் பணத்தை சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு கணகச்சிதமாக பிரித்து கொடுத்து விடுவார்கள். மிகவும் குறைவாக விற்பனையாகும் கடைகளில் சொஞ்சம் குறைவாக பணம்(மாமூல் ) கொடுத்தால் அடுத்தவாரமே காலால் துறை ரைடு, மேலாளர் ரைடு, பறக்கும் படை ரைடு, என தொடர்ந்து அதிகாரத்தை பயண்படுத்தி தொல்லை கொடுப்பார்கள். இவர்களுக்கு ஏஜன்டாக செயல்படும் மேற்பார்வையாளர்கள் கடைகளுக்கு ஆய்விற்க்கு செல்வதில்லை! அப்படியே ஆய்விற்க்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் அலுவலக இளநிலை பணியாளர் கணேசன் மூலம் முன்கூட்டியே தகவல் அனுப்பி விடுவார்கள். இதற்க்காக தூத்துக்குடி அலுவலக ஊழியர் கணேசனுக்கு தனியாக மாதம் மாதம் கணிசமாக கவணிக்க வேண்டும் மேற்பார்வையாளர்கள் . எஜண்டாக (மேற்பார்வையாளர் ) இருப்பவர்கள் கடைக்கு தனி மரியாதை உண்டு . இது பற்றி டாஸ்மாக் பணியாளர் ஏ,ஜ,டி,யூ,சி, சங்கம் மாநில துணைதலைவர் நெல்லை நெப்போலியனிடம் கேட்டபோது.
தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தில் இளநிலை பணியாளராக பணியாற்றிவரும் கணேசன் என்பவர் டாஸ்மாக்கில் மேற்பார்வையாளராக பணியாற்றுவதற்கு முன் தின கூலியாக வருவாய் துறையில் பணியாற்றியதால் தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரிகளுடன் இணைந்து பல அரசு நிலங்களை விற்பனை செய்வதில் புரோக்கராக செயல்பட்ட, செயல்படுகின்ற காரணத்தால், காலால் அதிகாரி சந்திரன் என்பவர் டாஸ்மாக்கில் இளநிலை ஊழியராக பணியாற்றும் கணேசனை தன்னுடன் ஆய்வுபணியில் ஈடுபடுத்தி டாஸ்மாக் கடை பணியாளர்களை மிரட்டியும் ஒருமையில் பேசியும் அவதூரான வார்த்தைகளால் திட்டியும் கடைகளில் பண வசூல் செய்கிறார். இந்த செயல் பணியாளர்களிடம் கொந்தளிப்பையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. இதை தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் ஏ,ஜ,டி,யூ,சி, தொழிற்சங்கம் கண்டிக்கிறது. இது பற்றி டாஸ்மாக் மேளாலர் அய்யப்பனிடம் கணேசன் வேலைபார்ப்பது டாஸ்மாக்கிலா? அல்லது கலால் துறையிலா? என்று கேட்டதற்கு அது மேலிடத்து உத்தவு என்று பதில் தருகிறார் .அப்படியே இவர் தேர்தல் பறக்கும்படையில் நியமிக்கபட்டாலும் இளநிலை ஊழியர்கள் பலர் இருக்கும் போது இவரை மட்டும் பரிந்துறை செய்தது ஏன் ? என்றும் தேர்தல் பறக்கும் படை அணியில் தூத்துக்குடி கோட்ட கலால் சந்திரனும் கணேசனும் மட்டும் தான் நியமிக்கப்பட்டுள்ளார்களா ?என்றும்
டாஸ்மாக் கடைகளில் ஆய்வு செய்யும் போது சிட்டா, செல்லான், ஸ்டாக் மற்றும் 30%க்கும் மேல் விற்பனை, பார்களில் ஆய்வு செய்யாமலும் எம் .ஆர்.பி. ஐ மட்டும் ஆய்வு செய்வது ஏன் ? என்றும் .
மற்றும் கணேசன் பணியாற்றிய ஓர் ஆண்டு காலமாக நிர்வாகத்திற்க்கு தவறான தகவலை கொடுத்து வருகிறார் . குறிப்பாக ஒரு கடையில் ஒரு நாளில் சராசரி விற்பனை 7,66,432க்கு தேவையான விற்பனையாளர் 15 நபர் மேற்பார்வையாளர் 7 நபர் ஆவர். ஆனால் அந்த கடையில் பணியுரியும் மேற்பார்வையாளர் 4 நபரும் ஒரு விற்பனையாளர் மட்டுமே பணிசெய்கின்றனர் ஆனால் கணேசனோ அக்கடைக்கு ஒரு விற்பணையாளர் மட்டுமே தேவை என்று முதுநிலை மண்டமேலாளர்க்கு பரிந்துரை செய்திருக்கிறார் , மீதி தேவைபடும் விற்பனையாளர்களை பணி அமர்த்தாமல் வெளிநபரை வைத்து கையூட்டு பெற்றுகொண்டு பணிநடை பெறுகிறது? உதாரண மாக ஒரு கடையை மட்டும் குறிப்பிடுகிறோம்.இதுபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 120 கடைகளுக்கும் மேல் இவ்வாறு குற்றசாட்டை கூறிக்கொண்டே போகலாம் மற்றும் கொரானா கால கடையடைப்பின் போது இவரின் நெருங்கிய நண்பர்கள் இரவு நேரத்தில் கடையை திறந்து கள்ள சந்தையில் மது பானங்களை மொத்தமாக விற்ற செய்ததில் கணேசனுக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. இது போன்று அவர் மீது டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் பல புகார் கொடுத்தும் கண்டுகொள்ளாமல் துணைபோகிறார் மாவட்ட மேளாலர்.ஆகவே இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் ஏ,ஜ,டி,யூ,சி சங்கம் கேட்டுக்கொள்கிறது என்றார்.