ஷ்யாம் நீயூஸ்
26.04.2021
தூத்துக்குடி டாஸ்மாகில் அராஜகம் செய்யும் இளநிலை உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு!
தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாகில் அராஜகம் செய்யும் இளநிலை உதவியாளர் கணேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி டாஸ்மாக் அணைத்து பணியாளர்கள் சங்கம் நிர்வாகிகள் குழு சார்பாக டாஸ்மாக் ஏஜடியூசி மாநில துணை தலைவர் நெல்லை நெப்போலியன் தலைமயில் மாவட்ட மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் கணேசன் சுமார் ஒரு ஆண்டு காலமாக நிர்வாக முறைகேடு மற்றும் மோசடியான சில குற்றங்களை செய்துவருகிறார். ஓர் ஆண்டு காலம் நிறைவடையாத தண்டனை பெற்ற பணியாளர்களை வேண்ட பட்டவர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு அதே கடையில் பணி செய்ய அனுமதித்தல் மேல் அதிகாரிகளுக்கு தவறான மோசடியான குறிப்பை கொடுத்தல் , பணியாளர்களை மரியாதை குறைவாக திட்டுதல் மற்றும் கோட்ட கலால் சந்திரனுடன் சென்று டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை மிரட்டி பணம் வசூல் செய்தல் போன்ற தொடர்ந்து அராஜகமாக செயல்படுவதால் தொழிலாளிகளின் மன உலச்சளுக்கும் கொந்தளிபுக்கும் ஆளாகியுள்ளார்.மற்றும் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களின் பணி நேரம் தெரியாமல் அவர்களுக்கு வருகை பதிவேட்டில் ஆப்சன்ட் போட்டு மிரட்டுவது?இவ்வாறு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தேர்தல் நேரத்தில் மிரட்டி பண வசூலில் ஈடுபடும் கணேசன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தற்போது அவர் பார்க்கும் பொறுப்புகளை ஒரு நேர்மையான இளநிலை உதவியாளரிடம் ஒப்படைக்கவேண்டும் எனவும் மேலாளரிடம் தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் அணைத்து சங்கம் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர். அதற்க்கு மாவட்ட மேலாளர் அய்யப்பன் தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் என தெரிவித்தனர் . மேலும் இதை பற்றி நிர்வாகிகளிடம் கேட்டபோது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் கணேசன் மீது உள்ள குற்றசாட்டுகள் ஆதாரத்துடன் உள்ளதால் லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். மேற்கொண்டு போராட்டம் எதுவும் நடத்த திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு கணேசன் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிகையாக போராட்டத்தை அறிவிப்போம் என்றும் கூறினர்.இதில் தூத்துக்குடி டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் நிர்வாகிகள் ஏஜடியூசி சங்கத்தை சார்ந்த நெல்லை நெப்போலியன்,காளிமுத்து முத்துகிருஷ்ணன், ராஜபாண்டி .சிஜடியூ சங்கத்தை சார்ந்த ஜெகன், ஆனந்தராஜ், கு. பா. சங்கம் புஸ்பராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.