ஷ்யாம் நீயூஸ்
23.03.2021
ஓட்டபிடாராம் சட்டமன்ற வேட்பாளர் சண்முகையா காலான்கரை கிராமத்தில் வாக்கு சேகரிப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் ஒன்று ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதியாகும் கடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பிராக உள்ள சண்முகையா மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று காலை தூத்துக்குடிக்கு தேர்தல் சுற்றுபயணம் வந்த திமுக தலைவர் மு, க ஸ்டானின் பேசுகையில் 13 நபர்களை சுட்டு கொன்றவர்களுக்கு பாடம் புகட்டுங்கள் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் பென்னிக்ஸ் என்கின்ற தந்தை மகனை அடித்தே காவல்துறை கொலை செய்துவிட்டு உடல்நிலை சரியில்லாமல் இறந்தார்கள் என்று தவறான தகவலை பரப்பினர். அவர்களுக்கு நிதி கிடைக்க சிபிஜ விசாரனை வேண்டும் கேட்டது திமுக என்றும் அதிமுக ஆட்ச்சியில் சட்டம் ஒழுங்கு கேட்டுவிட்டது அதற்க்கு தூத்துக்குடியே சாட்சி என்றும் தூத்துக்குடியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிளும் திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்யவேண்டும் எனவும் வாக்குகள் சேகரித்தார். இதனை தொடர்ந்து ஒட்டபிடாரம் திமுக வேட்பாளர் சண்முகையா திமுக தேர்தல் வாக்குறுதிகளான பெண்களுக்கு இலவச பேருந்து பயணம். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொரானா கால பாதிப்பாக 4000 ரூபாய் வழங்கபடும் வேலை வாய்ப்பு, குடிநீர் பிரச்சனை தீர்த்து வைக்கபடும் என தேர்தல் திமுக தேர்தல் வாக்குறுதிகளை சொல்லி நேற்று மாலை காலான்கரை கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது மாவட்ட ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, மாவட்ட பிரதிநிதி நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர் . திமுக கிளை செயளாலர் ராஜ், துணை கிளை செயலாளர் சந்திரகலா, துணை செயலாளர் சின்னகனி ஒன்றிய விவசாய துணை செயலாளர் மு. பாலமுருகன் ஆதிதிராவிடர் துறை அமைப்பாளர் அழகுராஜா,காலான்கரை திமுக மத்திய ஒன்றிய பிரதிநிதிகள் சு. பெருமாள், இ. ராமகிருஷ்ணன், என், பொன்இருளான்டி, என். ராஜமந்திரி எஸ். கருப்பசாமி., மு ராமசந்திரன், க. ஆதிலிங்கம், ஒ. சஞ்சிவ்காந்தி, த. பண்டாரம், அ. வேல்முருகன் (காங்கிரஸ்) எம். பொன்ராஜ், பெ. பொன்னுதுரை, அ. சண்முகராஜா, எஸ். ராமர், எஸ். கருப்பசாமி, ராமலிங்கம். மகளிர் அணியை சார்ந்த மே. ஞானகனி (9வது வார்டு) பி. அமுதாவளர்மதி, க. லெட்சுமி, மகேஷ்வரி, ஆர். அமுதா , கே. இந்திரா, பி. பரமேஸ்வரி ஆகியோர் வரவேற்பு வழங்கினர்.