ஷ்யாம் நீயூஸ்
27.03.2021
அம்மா என்றால் சும்மா இல்லை!தூத்துக்குடியில் குழந்தைக்கு கிட்னி தானம் செய்யவிருக்கும் தாய் !
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சார்ந்த சிறுமி அனுஷ்யா (15) இவரது தாய் ஆஷா. தந்தை கிங்ஸ்டன் ஆரோக்கியராஜ் இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு இரும்பு கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் அனுஷ்யாவிற்க்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிட்னி செயல்படாமல் போனது அன்று முதல் அந்த பெண் குழந்தைக்கு பெற்றோர் டயாலிசிஸ் செய்து வருகிறார்கள் இதற்க்கு ஆகும் செலவுகளை சமாளிப்பதற்கு தூத்துக்குடி கலாம் சேவை மையம் பொதுமக்களிடம் நிதி பெற்று கொடுத்து வந்துள்ளனர். இதை கண்ட தூத்துக்குடி சர்வதேச மனித உரிமை கழகம் தலைவர் டாக்டர் ராஜலட்சுமி ராஜ்குமார் நாமும் உதவலாம் என்ற நல்ல நோக்கத்தில் நிதி திரட்ட முன் வந்துள்ளார். தனது குழந்தையின் உயிரை காப்பாற்ற தாய் தனது கிட்னியை தானம் செய்ய முன் வந்ததால் அதற்க்கு ஆகும் செலவுகளை முடிந்த அளவு திரட்டி விட்டு மேற்கொண்டு செலவுகளை சுமார் (10லட்சம்) எப்படியாது சமாளிக்கலாம் என்ற தைரித்திலும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர் இந்த சமுக அக்கரை உள்ளவர்கள். இந்த குழந்தை உயிரை காப்பாற்ற தூத்துக்குடி வாட்டர் டேங்க் அருகில் சென்று வரும் பொது மக்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.